சடலமாக மீட்கப்பட்ட மருத்துவ பீட மாணவனுக்கு அருகில் 10 பக்க கடிதம்

270

 

கொழும்பு, நொரிஸ் கெனல் வீதியிலுள்ள மருத்துவ பீட மாணவர்களுக்கான விடுதியில் சடலமாக மீட்கப்பட்ட மருத்துவ பீட மாணவனின் அருகில் இருந்து 10 பக்கங்களிலான கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உடலமாக மீட்கப்பட்ட 27 வயதுடைய மாணவன் நோய் நிலைமை காரணமாக தொடர்ந்து மருத்துவ சிகிச்சைகள் பெற்று வந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த மாணவன் ஏதேனும் மருந்து வகையொன்றை உட்கொண்டதன் மூலம் மரணித்திருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

எனினும் குறித்த மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்,

இந்த மாணவன் நேற்று உடலமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

புதிய இணைப்பு

கொழும்பு பல்கலைக்கழக மாணவனின் கடிதம் தொடர்பில் தகவல்

நேற்றைய தினம் சடலமாக மீட்கப்பட்ட கொழும்பு பல்கலைக்கழக மாணவன் எழுதிவைத்துள்ள கடிதம் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த கடிதமானது 10 பக்கங்களைக் கொண்டதுடன், ஆங்கில மொழியில்எழுதப்பட்டிருந்தாகவும் பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.

பிபிலை பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதான ஹரிந்த செனவிரத்ன என்ற மாணவனே சடலமாக மீட்கப்பட்டிருந்தான்.

இதேவேளை குறித்த மாணவன் இரண்டு தடவை தனது வைத்திய பட்டத்திற்காகபரீட்சைகளுக்கு தோற்றிய போதும் இரண்டு தடவைகளிலும் மாணவரால் பரீட்சையில்சித்தியடைய முடியாமல் போயிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில் ‘தான் வாழ்க்கையில் மிகவும் விரக்தியைஎதிர்நோக்கியுள்ளதாகவும், தனது சடலத்தை தனது பெற்றோருக்கு மாத்திரம்காண்பிக்குமாறும், பின்னர் சடலத்தை கடலில் வீசுமாறும் எழுதப்பட்டுள்ளதாகவும்குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடுதியில் ஒரு அறையில் இரண்டு மாணவர்கள் வீதம் தங்கியிருந்த நிலையில்குறித்த மாணவன் உயிரிழந்த அறையில் குறித்த மாணவன் மட்டுமேதங்கியிருந்ததாகவும், அறையில் துர்நாற்றம் வீசியதை அடுத்தே குறித்த அறையைதிறந்து பார்த்த போதே மாணவன் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளதாககுறிப்பிடப்பட்டுள்ளது.

மாணவனின் சடலத்துக்கு அருகில் சேலைன் போத்தல் ஒன்றும், ஊசிகளும்மீட்கப்பட்டுள்ளதாக கறுவாத்தோட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

SHARE