“சட்டம் எல்லோருக்கும் பொதுவானது. இராணுவத்தினருக்கு ஒரு சட்டம், பொதுமக்களுக்கு ஒரு சட்டம் என்று இருக்க முடியாது- எம்.ஏ.சுமந்திரன்.

218

 

“சட்டம் எல்லோருக்கும் பொதுவானது. இராணுவத்தினருக்கு ஒரு சட்டம், பொதுமக்களுக்கு ஒரு சட்டம் என்று இருக்க முடியாது.

sumanthiran500

16 மாதங்கள் இராணுவப் புலனாய்வாளர்கள் சிறைவைக்கப்பட்டிருக்கின்றனர் எனக் கூறும் ஜனாதிபதி, 16வருடங்களுக்கு மேலாக தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் வாடுவதை பற்றி ஏன் சிந்திக்கவில்லை?”

இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்.

“16 மாதங்கள் இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த வழக்கோடு தொடர்புபட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினேன்.

முதலில் அவர்கள் என்னிடம் இரண்டு வாரங்கள் என்று கூறினார்கள். பிறகு ஒரு மாதம் என்றார்கள். அதன் பின்னர் மூன்று மாதங்கள் என்றார்கள். இப்போது 16 மாதங்கள் கடந்துவிட்டன.

குற்றம் செய்திருந்தால் வழக்குத் தொடர வேண்டும். குற்றத்தோடு தொடர்புபட்டிருக்காவிட்டால் விடுதலை செய்யப்பட வேண்டும். குற்றம் செய்திருந்தால் பிணையில் விடுதலை செய்து வழக்கைக் கொண்டு நடத்த வேண்டும்.

நாட்டு மக்களுக்கு அடிப்படை உரிமை என்று ஒன்றுள்ளது” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றுமுன்தினம் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே சுமந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

“ஜனாதிபதியின் கூற்றுத் தவறானது. நாட்டில் சட்டம் எல்லோருக்கும் பொதுவானது. இராணுவத்தினருக்கு ஒரு சட்டம், பொதுமக்களுக்கு ஒரு சட்டம் என்று கிடையாது.

16 மாதங்கள் இராணுவத்தினர் சிறை வைக்கப்பட்டிருப்பது தொடர்பில் ஜனாதிபதி அக்கறை கொள்கின்றார். ஆனால், 16 வருடங்களாக தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் வாடிக் கொண்டிருக்கின்றனர்.

அவர்களைக் கடந்த வருடம் நவம்பர் மாதம் விடுவிப்பதாகத் தெரிவித்தார்கள். இன்னமும் முழுமையாக அவர்களை விடுவித்து முடியவில்லை” என்று சுமந்திரன் எம்.பி. மேலும் தெரிவித்தார்.

SHARE