சமாதானத்துக்கு இதுவே தடையாக இருந்தது! அமைச்சர் மங்கள

269

 

இலங்கையின் தேசியப்பிரச்சினைக்கான காரணத்தை கண்டறியாமையே சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை காணமுடியாமல் போனது என வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

சமூகத்தில் ஏற்பட்ட பிரிவுகள் மத ரீதியாகவும், இன ரீதியாகவும் வேறுப்பட்டன. அத்துடன் பேச்சு சுதந்திரம் தடுக்கப்பட்டது.சமூகத்தில் பயம் நிறைந்த சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதியன்று இலங்கை மக்களால் ஏற்படுத்தப்பட்ட புதிய ஆட்சியின் மூலம் இலங்கை மக்கள், வன்முறையற்ற, சர்வதிகாரமற்ற நிலையை அடைந்துள்ளார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்

அந்த வெற்றியின் மூலம் ஜனநாயக ஆட்சிக்கான அத்திவாரம் போடப்பட்டதாக அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

சுலோவேனியாவுக்கு சென்றுள்ள அமைச்சர் அங்கு, மத்தியக்கிழக்கு மற்றும் போல்கன் கற்கைக்களுக்கான சர்வதேச நிறுவத்தில் இடம்பெற்ற நிகழ்வின்போது இந்தக்கருத்துக்களை வெளியிட்டார்.

ஜனவரி 8ஆம் திகதி ஜனாதிபதி பதவியில் மாற்றங்கள் ஏற்பட்டமையை அடுத்து ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் வெற்றிப்பெற்ற ஐக்கிய தேசியக்கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE