சம்பந்தனின் அரசியல் சாணக்கியம் வவுனியா பொருளாதார மத்திய நிலைய வாக்கெடப்பில் ஆதராவாக வாக்களித்தவர்களின் அரசியல் ஆட்டம் இனி அவுட்

305

 

பொருளாதார மத்திய நிலையம் ஒமந்தையில் ; வாக்களிப்பை 13 உறுப்பினர்கள் பகிஷ்கரிப்பு

வடக்கு பொருளாதார மத்திய நிலையம் எங்கு அமைக்கப்பட வேண்டும் என்பது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் வட மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பில் 13 உறுப்பினர்கள் கலந்துகொள்ளாது வாக்களிப்பை பகிஷ்கரித்துள்ளனர்.

Sampanthan-Chandrika-01

வடக்கு பொருளாதார மத்திய நிலையத்தை தாண்டிக்குளத்தில் அமைப்பதா அல்லது ஒமந்தையில் அமைப்பதா என்பது தொடர்பில் சர்ச்சைகள் எழுந்ததை அடுத்தே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை, வட மாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்யும் தமது உறுப்பினர்களிடையே கருத்துக்கணிப்பை நடாத்தத் தீர்மானித்தது.

வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்கும் இடத்தை தெரிவு செய்வது குறித்த சர்ச்சை தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள்ளும் எழுந்த நிலையில் கடந்த 3 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பிலுள்ள எதிர்கட்சித் தலைவரின் உத்தியோகபுர்வ அலுவலகத்தில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் உட்பட வட மாகாண சபை உறுப்பினர்கள், மாவை சேனாதிராசா உட்பட வடக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்கள் 30 பேரிடமும், வடமாகாணத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேரிடமும் கருத்துக்களை பெற்றுக்கொள்ளுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனிடம் வலியுறுத்தினார்.

இந்நிலையில் முதலமைச்சரின் பிரத்தியேக செயலாளரினால், வடமாகாண சபையின் ஆளும் கட்சி மாகாண உறுப்பினர்களுக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாக்குச் சீட்டுக்கள் மின்னஞ்சல் மூலமாகவும், பதிவுத் தபால் மூலமாகவும் கடந்த 7 ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்டன.

அதனடிப்படையில் இன்று திங்கட்கிழமை நண்பகல் 12 மணியுடன் அதற்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்தன. இதற்கமைய ஒமந்தையில் பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்பட வேண்டும் என முதலமைச்சர் உட்பட 18 மாகாண சபை உறுப்பினர்களும், 3 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்துள்ளனர்.

தாண்டிக்குளத்தில் பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்பட வேண்டும் என 3 மாகாண சபை உறுப்பினர்களும், 2 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்துள்ளனர்.

இந்த வாக்கெடுப்பை 8 மாகாண சபை உறுப்பினர்களும் 5 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பகிஷ்கரித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த வாக்களிப்பு தொடர்பான முழுமையான பெயர் விபரம் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒமந்தையில் பொருளாதார மத்திய நிலையம்

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

சிவஞானம் சிறிதரன்
சிவசக்தி ஆனந்தன்
தர்மலிங்கம் சித்தாத்தன்

கல்வியமைச்சர் குருகுலராசா

விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன்

மாகாண சபை உறுப்பினர்கள்

 

கனபதிபிள்ளை தர்மலிங்கம்

விந்தன் கனகரத்னம்

பாலசந்திரன் கஜதீபன்

கந்தையா சர்வேஸ்வரன்

அரியரட்ணம் பசுபதி

கனசீலன் குணசீலன்

அன்ரனி ஜெகநாதன்

துரைராசா ரவிகரன்

கந்தையா சிவனேசன்

ராமநாதர் இந்திரராசா

எம்.தியாகராசா

பசுபதிப்பிள்ளை சுப்ரமணியம்

அனந்தி சசிதரன்

வேலுப்பிள்ளை சிவயோகன்

கனகலிங்கம் சிவாஜிலிங்கம்

தாண்டிக்குளத்தில் பொருளாதார மத்திய நிலையம்

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

சாந்தி சிறிஸ்கந்தராஜா
சிவப்பிரகாசம் சிவமோகன்

சுகாதார அமைச்சர் பரமநாதன் சத்தியலிங்கம்

மாகாண சபை உறுப்பினர்கள்
கந்தையா சிவஞானம்
ஆரியக்குட்டி பரஞ்சோதி

 

வாக்களிப்பை பகிஷ்கரித்தவர்கள்.

மாகாண சபை உறுப்பினர்கள்

இம்மனுவேல் ஆனல்ட்
கேசவன் சயந்தன்
கந்தர் தாமோதரம் பிள்ளை லிங்காத்ன்
அயோப் அஸ்வின்

சந்திரலிங்கம் சுகிர்தன்

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

சாள்ஸ் நிர்மலநாதன்
மாவை சேனாதிராஜா
செல்வம் அடைக்கலாநாதன்
ஈஸ்வரபதம் சரவணபவன்
எம்.ஏ. சமந்திரன்.

மீன்பிடி அமைச்சர் பாலசுப்ரமணியம் டெனிஸ்வரன்

வடமாகாண சபையின் புதிய உறுப்பினராக மயூரன் பதவியேற்றுள்ள நிலையில் அவர் தொடர்பான வர்தமானி அறிவித்தல் வெளியாகவில்லை.

இதனால் அவர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லையென வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்தார்.

இதேவேளை, வடக்கு பொருளாதார மத்திய நிலையம் தொடர்பான வடமாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வடபகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்கணிப்பு தொடர்பான புள்ளிவிபரங்கள் சமுக வலைத்தளங்களில் நேற்றைய தினம் வெளியாகியிருந்தது.

எனினும் அந்த தகவல்கள் இன்று வெளியான தகவல்களுடன் மாறுபட்ட கருத்துக்களை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பொருளாதார மத்திய நிலையம் தொடர்பான கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பிற்கான வாக்குச் சீட்டுக்கள் தமக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை வரை கிடைக்கவில்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா நேற்று வடமாகாண முதலமைச்சருடனான சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

SHARE