சம்பந்தன் கைதுசெய்யப்பட வேண்டுமென தென்னிலங்கையிலுள்ள சில கடும்போக்கு அமைப்புக்கள்

259

 

கிளிநொச்சியிலுள்ள இராணுவ முகாமொன்றிற்குள் எதிர்க்கட்சித் தலைவர் அத்துமீறி பிரவேசித்ததாக பல விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், தாம் அவ்வாறு அத்துமீறி பிரவேசிக்கவில்லையென்றும் மக்களது காணிகளை பார்வையிடுவதற்காகவே அங்கு சென்றதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

 

இராணுவ முகாமிற்குள் அத்துமீறி சென்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில், அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-

”இராணுவத்தின் 57ஆவது படைப் பிரிவினர் கையகப்படுத்தியுள்ள, வடக்கு தமிழர்களுக்கு சொந்தமான காணிகள் குறித்து பார்வையிடுவதற்கும் ஆராய்வதற்குமே நாங்கள் அங்கு சென்றிருந்தோம். நாம் அங்கு சென்றபோது இராணுவ முகாமின் பிரதான நுழைவாயில் திறந்துவிடப்பட்டதன் காரணமாகவே முகாமுக்குள் உள்நுழைந்தோம்.

மாறாக தற்போது முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலோ, இல்லாவிட்டால் கருத்தாடல்களின் பிரகாரமோ நாம் இராணுவ முகாமுக்குள் அத்துமீறி பிரவேசிக்கவில்லை. இந்நிலையில், இராணுவ முகாமுக்குள் அத்துமீறிப் பிரவேசித்த குற்றச்சாட்டில் என்னைக் கைது செய்யக் கோரும் நபர்களின் கூற்றுக்களை நிராகரிப்பதுடன் எனது கண்டனத்தையும் தெரிவிக்கின்றேன்” என குறிப்பிட்டுள்ளார்.

233_1440351415_sampoor_people_005

எனினும், சம்பந்தன் கைதுசெய்யப்பட வேண்டுமென தென்னிலங்கையிலுள்ள சில கடும்போக்கு அமைப்புகளும் தமிழர்களுக்கு எதிரானவர்களும் கோஷமெழுப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE