சம்பந்தமான உத்தியோகபூர்வ அறிவிப்பு ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பொது இணக்கப்பாட்டு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதும் வெளியிடப்படும்.

401
மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை தோற்கடிப்பதற்காக பல மாதங்களாக எதிர்க்கட்சிகளுக்கும் அரசாங்க கட்சியின் உறுப்பினர்களுக்கும் இடையில் நடத்த பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவுக்கு வந்துள்ளதாக அதனுடன் சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரது முழுமையான விருப்பம் கிடைத்துள்ளது.

பல்வேறு கட்சிகளும், குழுக்களும் இன, மத பேதமின்றி ராஜபக்ச அரசாங்கத்தை தோற்கடித்து நாட்டில் மீண்டும் ஜனநாயகம் மற்றும் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்காக பொது வேட்பாளரை பொதுச் சின்னத்திலும் பொது தேசிய கூட்டணியின் சார்பிலும் நிறுத்த தீர்மானித்துள்ளன.

இது சம்பந்தமான உத்தியோகபூர்வ அறிவிப்பு ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பொது இணக்கப்பாட்டு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதும் வெளியிடப்படும்.

அதேவேளை அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் இன்று அல்லது நாளை அரசாங்கத்தில் இருந்து வெளியேறக் கூடும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை ஜனாதிபதி இன்று வெளியிடவுள்ள நிலையில், ஏற்பட்டுள்ள கள நிலைமைகள் மற்றும் புலனாய்வு சேவைகளின் அறிக்கைகளின் படி மகிந்த ராஜபகச பெரும் சிரமமான போட்டியை எதிர்நோக்குவார் என அலரி மாளிகை வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி முக்கியமான பேச்சுவார்த்தை ஒன்றில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகி்ன்றன.

– See more at: http://www.tamilwin.net/show-RUmszBSdKYisy.html#sthash.y8IZEmx8.dpuf

SHARE