சர்வதேச ரீதியில் ஜனாதிபதிக்கு மிகப் பெரிய வரவேற்பு!

234

maithripala-sirisena-9_3

ஐக்கிய நாடுகளின் 71ஆவது பொதுச் சபைக் கூட்டம் என்பது இலங்கைக்கு சர்வதேச ரீதியில் மேலும் முன்னோக்கி செல்ல கிடைத்துள்ள சந்தர்ப்பம் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

நியூயோர்க்கில் இருந்து வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அமைச்சர் இதை குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சர்வதேச ரீதியில் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறியுள்ளார்.

நியூயோர்க்கில் இன்று ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டம் எதிர்வரும் 26ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டம் சில காரணங்களால் முக்கியத்துவம் பெறுகிறது.

10 வருடங்களாக செயலாளர் நாயகமாக பதவி வகித்த பான் கீ மூன் தலைமையில் நடைபெறும் இறுதி பொதுச் சபைக் கூட்டம் இதுவாகும்.

இதனை தவிர குடியேற்றவாசிகள் தொடர்பான மாநாடும் நியூயோர்க்கில் ஐ.நா மற்றும் அமெரிக்காவின் அனுசரணையில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாடு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தலைமையில் நடைபெறவுள்ளது.

ஒபாமா மாநாட்டில் உரையாற்ற உள்ளதுடன் அவர் உரையாற்றும் இறுதி மாநாடு இதுவாகும். இதனிடையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 21ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்ற உள்ளார்.

SHARE