சவாலான 6 இரவு – 6 பகல் இடைவிடாத பயணத்தை தொடங்கியது சோலார் இம்பல்ஸ் 2 சூரிய ஒளி விமானம்

341
உலகின் முதல் சூரிய சக்தி விமானமான சோலார் இம்பல்ஸ் தனது மிக முக்கியமான பயணமான சீனாவில் இருந்து மத்திய பசிபிக் நோக்கி தொடர்ந்து 6 இரவு மற்றும் 6 பகல் நிற்காமல் பறக்கும் கனவு பயணத்தை இன்று அதிகாலை தொடங்கியது.

ஏறத்தாழ 5 மாதங்கள் சூரிய ஒளியைக் கொண்டே உலகை சுற்றவுள்ள இந்த விமானம், சுமார் 22,000 மைல் தூரத்தை தனது பயணத்தில் கடக்க இருக்கிறது. 500 மணி நேரம் வானில் பறக்கும் இந்த விமானம், ஒரு சொட்டு விமான எரிபொருளைக் கூட உபயோகப்படுத்தாமல் மூன்று கண்டங்களையும், இரண்டு கடற்பரப்புகளையும் கடக்க உள்ளது.

கடந்த மார்ச் 9-ம் தேதி அபுதாபியில் இருந்து கிளம்பிய சோலார் இம்பல்ஸ் விமானத்தின், உலகம் முழுவதும் பறக்கும் லட்சியப் பயணத்தை தொடரும் வகையில் இன்று சீனாவின் கிழக்கு பிராந்தியமான நான்ஜிங்கில் இருந்து அமெரிக்காவின் ஹவாய் தீவுகளை நோக்கி புறப்பட்டது. சுமார் 8,500 கிலோமீட்டர் தூரத்திற்கான இப்பயணத்தில் 62 வயதான விமானி ஆண்ட்ரே போர்ஸ்பெர்க் விமானத்தை ஓட்டிச்சென்றார்.

வானிலை மிகவும் நன்றாக உள்ளதால், நிலையான வேகத்தில் ஹவாய் தீவை குறித்த நேரத்தில் சென்றடையமுடியும் என நினைப்பதாகவும், இந்த ஆறு நாள் பயணத்தை தனித்து வெற்றிகரமாக மேற்கொண்டு ஹவாய் தீவில் தரையிறங்குவேன் என்றும் பயணத்தை துவக்குவதற்கு முன் போர்ஸ்பெர்க் கூறியது குறிப்பிடத்தக்கது

SHARE