சானியா மிர்சாவிற்கு கேல் ரத்னா விருது வழங்க இடைக்கால தடை! உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

321
இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு கேல் ரத்னா விருது வழங்க கர்நாடக உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.விளையாட்டுத் துறையில் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு சானியாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.முன்னாள் நீதிபதி வி. கே. பாலி தலைமையில் அமைக்கப்பட்ட விருது கமிட்டி, சானியா மிர்சாவைத் தெரிவு செய்தது.இந்த நிலையில் கடந்த 2012ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் (பாராலிம்பிக்) வெள்ளி பதக்கம் பெற்ற வீரர் எச்.எம்.கிரிஷா மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், கேல் ரதனா விருது பெறுவதற்கு சானியாவை விட தனக்கு அதிக தகுதியிருப்பதாகவும், அதனால் சானியாவிற்கு விருது கொடுக்க தடை விதிக்கவேண்டும் என்று கோரி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், மத்திய அரசு சானியா மிர்சாவிற்கு கேல் ரத்னா விருது கொடுக்க இடைக்காலதடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

மேலும், இதுதொடர்பாக சானியா மிர்சா மற்றும் மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

SHARE