சாமி 2 எப்போது? இயக்குநர் ஹரி பதில்

273

விக்ரம் நடித்துள்ள இருமுகன் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஹரி பேசியபோது விக்ரமுடன் இணைந்து சாமி 2 படத்தை விரைவில் தொடங்க உள்ளதாகத் தெரிவித்தார். படத்தை ஷிபு தமீன்ஸ் தயாரிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை, பிரியன் ஒளிப்பதிவு என்கிற கூடுதல் தகவல்களையும் அளித்தார்.

இதற்கு முன்பு வெளிவந்த இரு பாகங்களும் வெற்றி பெற்றதால் சூர்யா – இயக்குநர் ஹரி கூட்டணியில் எஸ் 3 (சிங்கம் 3) உருவாகி வருகிறது. இதற்கடுத்து விக்ரம் – ஹரி கூட்டணியில் சாமி 2 தொடங்க உள்ளது. 2003-ல் வெளிவந்த சாமி சூப்பர் ஹிட் ஆனது. சாமி 2 படத்தைப் பற்றிய இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே இப்போதிருந்தே அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் சாமி 2 படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று ஒரு பேட்டியில் இயக்குநர் ஹரி கூறியதாவது: அடுத்ததாக விக்ரம் கருடா என்கிற படத்தில் நடிக்க உள்ளார். அது முடிந்தபிறகுதான் சாமி 2 படப்பிடிப்பு தொடங்கும். அடுத்தவருடம்தான் படப்பிடிப்பு நடைபெறும். இது நிச்சயம் பெரிய படமாக உருவாகும். 10 வருடங்களுக்குப் பிறகு இணைவதால் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் என்றார்.

SHARE