சார்க் மாநாட்டில் நரேந்திரமேடியை கண்ட மகிந்த பதட்டப்பட்டதாகவும் அங்கும் இங்கும் ஓடித் திரிந்ததாக நேபாள நாட்டின் செய்தித் தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது

407

சார்க் மாநாட்டில் நரேந்திரமேடியை கண்ட மகிந்த பதட்டப்பட்டதாகவும் அங்கும் இங்கும் ஓடித் திரிந்ததாக நேபாள நாட்டின் செய்தித் தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது

வழமையை விட பதட்டத்துடன் கானப்பட்டதாகவும் வழமையான மதிப்பு மரியாதை இம்முறை வழங்கப்படவி;ல்லை இலங்கை ஜனாதிபதிக்கு என அப் பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது அத்துடன் அங்கு நடை பெற்ற நிகழ்வு தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது.

நேபாள நாட்டின் தலைநகரான காட்மாண்டுவில் ‘சார்க்’ என்னும் தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியுடன், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் கலந்து கொண்டுள்ளார்.

இந்த மாநாட்டின் இடையே இவ்விரு தலைவர்களும் சந்தித்து, இரு தரப்பு உறவுகுறித்து பேச்சு வார்த்தை நடத்துவார்களா என்ற எதிர்பார்ப்பு உலக அரங்கில் நிலவியது. இந்த மாநாட்டில், ஒரே மேடையில் மோடியும், நவாஸ் ஷெரீப்பும் அமர்ந்திருந்தனர். அவர்கள் இருவருக்கும் இடையே மாலத்தீவு மற்றும் நேபாள தலைவர்கள் இருந்தனர்.

ஒரே மேடையில் அமர்ந்திருந்தபோதும், நரேந்திர மோடியும், நவாஸ் ஷெரீப்பும் கை குலுக்கிக்கொள்ளவில்லை. பரஸ்பரம், ஒருவருக்கொருவர் மரியாதை தெரிவிக்கவில்லை. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ளக்கூட இல்லை.

இன்று இரண்டாவது நாள் மாநாட்டில் இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து கொண்ட போது முதல் முறையாக ஒருவருக்கு ஒருவர் கை குலுக்கி கொண்டனர். பினர் ஒருவரௌக்கு ஒருவர் நலம் விசாரித்து கொண்டனர். என வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் செய்யத் அக்பருதீன் தெரிவித்துள்ளார்.

நேபாள தலைநகர் காட்மாண்டில் இருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கிழக்கு நேபாள தூலிகெல் மாவட்டத்தில் அதிகாரப்பூர்வமற்ற மற்றும் பலதரப்பு பேச்சு வார்த்தை நடைபெற்றதாகவும்ம். அப்போது பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேசியதாகவும் தகவல்கள் தெரிவித்து உள்லன. அப்போது இருதரப்பு பிரச்சனைகள் குறித்து விவாதம் ஏதும் நடைபெறவில்லை, எனவும் கூறப்படுகிறது.Maginta-ModeMaginta-Mode-01

SHARE