சிங்கள அரசின் ஸ்திரத்தன்மையை ஜனாதிபதித் தேர்தலில் உடைத்த இரா.சம்பந்தன் தற்போது சுரேஸ்பிரேமச்சந்திரன் கூட்டமைப்பை கூறுபோட நினைப்பது தவறு

301

 

சிங்கள அரசின் ஸ்திரத்தன்மையை ஜனாதிபதித் தேர்தலில் உடைத்த இரா.சம்பந்தன் – தமிழினத்திற்கு பாரிய வெற்றி – வடகிழக்கு வாக்குகளே மைத்திரியின் வெற்றிக்குக் காரணம்.

தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாக இருந்துவந்த விடுதலைப்புலிகள், அஹிம்சை வழியிலான நடவடிக்கைகளுக்காக விடுதலைப்புலகளின் தலைவர் வே.பிரபாகரனால் உருவாக்கப்பட்டதே தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு. தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்த காலகட்டத்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகித்த கட்சிகளுக்கு எந்தவித அதிகாரங்களும் இல்லாதிருந்தது. வன்னியில் புலிகளின் தலைமைகளே கூட்டமைப்பின் அரசியல் நடவடிக்கைகளுக்கு தலைமைதாங்கி வந்தது.

rwrsj5712

9482587010557251_10203690867888591_7462490913741828535_n-765x510

777 chandrka -ranil -sampanthan ITAK t1-620x264

தற்பொழுது விடுதலைப்புலிகளின் தலைமை மற்றும் தலையீடு இல்லாதிருக்கின்றபொழுது, தனது அரசியலை சுயமாக சம்பந்தன் அவர்கள் நடாத்திக்கொண்டிருக்கின்றார். அவர் செயற்பட ஆரம்பித்ததிலிருந்து தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமை இரண்டினையும ஒருபுறத்தில் ஓரங்கட்டிவைத்துவிட்டு, தனக்கே ஏற்ற பாணியில் விடுதலைப்புலிகளால் தெரிவுசெய்யப்பட்ட கூட்டமைப்பின் பிரதிநிதிகளை முதலில் விலக்கிக்கொண்டார். இதற்கு இவரது 50வருட அரசியல் துணையாக நின்றது. மாறி மாறி வந்த அரசாங்கங்கள் எல்லாவற்றுடனும் பேச்சுக்களை நடாத்திவந்த கூட்டமைப்பின் சம்பந்தன், எவ்வாறு சிங்கள தேசத்தின் சீரற்ற தன்மைகளை உடைப்பது என திட்டங்களை வகுத்தார்.

Untitled-1 copy

அதற்கான பொறிமுறைகளை உருவாக்கினார். வயதுசென்றாலும் கூட அவரது அரசியல் சாணக்கியம் பல அரசியல்வாதிகளாலும், மக்களாலும் விமர்சனத்திற்குள்ளாகியது. தேசிய அரசாங்கத்தினை அமைப்பது தொடர்பில் கூட்டமைப்பில் உள்ளவர்களில் பலருக்கு விருப்பமில்லை. இனப்படுகொலை செய்த மஹிந்த அவர்களை ஆதரிப்பதா? என்கின்றதான கேள்வி ஒருபுறமிருக்க, இவருக்கு முன் இனப்படுகொலை செய்த அனைத்து உறுப்பினர்களும் மைத்திரியினது கட்சியில் அங்கத்துவம் வகிக்கின்றனர். மிகவும் சிக்கலான சூழ்நிலையில் அவரது அரசியல் காய்நகர்த்தல்கள் மிகவும் நுட்பமான ரீதியில் செயற்பட்டது. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகித்த கட்சிகள், வடமாகாண அமைச்சர்கள், வடமாகாணசபையின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என அனைவரின் கருத்துக்களையும் உள்வாங்கிக்கொண்ட சம்பந்தன் அவர்களுடைய கருத்துக்கள் மாறுபட்டதாக அமைய, எவ்வாறு இனப்படுகொலையினை புரிந்தவர்களுக்கு வாக்களிப்பது? நிராகரித்தால் அல்லது வாக்களித்தால் என்ன பிரச்சினை ஏற்படும்? என்றெல்லாம் சரியாக சிந்தித்து அரசியலில் தூரநோக்கோடு மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பது என்கின்ற ஒரு தீர்மானத்திற்கு வந்தார்.
எந்த அரசாங்கங்கள் வந்தாலும் தமிழ் மக்கள் பேச்சுக்களை நடத்தியே அதனூடாக விடிவுகளை பெறாத ஒரு நிலையே கடந்த வரலாறுகள் எடுத்து நிற்க, அரசியல் ரீதியாக சிங்கள தேசத்தில் ஒரு உடைவினை ஏற்படுத்திப் பல்வேறு உத்திகளைக் கையாண்டு, சிங்கள தேசத்தில் இருக்கக்கூடிய கட்சிகளுக்குள் குழப்பங்களை ஏற்படுத்தி தமிழ் மக்களின் இனவிடுதலைக்காகவும், சுயநிர்ணய உரிமையை பாதுகாப்பதற்காகவும் முடிந்தளவு தனது அரசியல் சாணக்கியத்தை இந்த ஜனாதிபதித் தேர்தல் மூலம் வெளிப்படுத்தியிருந்தார் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். தமிழ் மக்களின் ஆதரவின்றி எந்தவொரு வேட்பாளரும் ஆட்சியினை அமைக்க முடியாது என்பதனை எடுத்துக்காட்டினார் சம்பந்தன் அவர்கள்.

TNA (1)

இனி குட்டையில் மீன்பிடிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள இலகுவான வழியாகவே சம்பந்தனின் முடிவுகள் மைத்திரியை ஆதரிப்பது என எடுக்கப்பட்டது. இவ்வாறான சூழ்நிலையில் வரலாறு காணாத வெற்றி ஒன்றினை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் இரா.சம்பந்தன் அவர்கள் நிகழ்த்திக்காட்டியுள்ளார். இதனையடுத்து தேசிய அரசுடன் இணைந்து செயற்படுவதன் ஊடாக என்ன நன்மை இருக்கின்றது என்பது தொடர்பில் ஆராய்ந்த சம்பந்தன், யாரை தேசிய அரசாங்கத்திற்கு அமைச்சர் பதவிக்காக ஆயத்தப்படுத்துவது என தற்போது துரிதப்படுத்தி வருகின்றார். இங்கே தான் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினருக்குள் பிளவுகள் ஏற்பட வாய்ப்புக்கள் இருக்கின்றன. தேசிய அரசாங்கத்தினை அமைப்பதற்கு உடன்படாது மேலும் எமது தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமையினை பாதுகாப்பதற்கான வழிகளை சம்பந்தன் அவர்கள் ஏற்படுத்துவாராகவிருந்தால், தொடர்ந்தும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு உடைந்துபோகாமல் இருக்கும். இல்லையேல கட்சி உடைவுகளை சந்திக்கவேண்டிய நிலையேற்படும். இதனையே மைத்திரி அரசும் எதிர்பார்க்கின்றது.

இதற்கு உடன்படாது கட்சிகளின் ஒற்றுமையை வலுப்படுத்துவதன் ஊடாக தமிழ் மக்களின் இருப்பினை தக்கவைத்துக்கொள்ளமுடியும். அரசியலில் சிறந்த ஆற்றல் உடைய சம்பந்தன் அவர்கள், அமைந்திருக்கும் அரசோடு கைகோர்த்து தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமை இரண்டினையும் குழிதோண்டிப் புதைத்துவிடுவாரோ? என்கின்றதான சந்தேகமும் மக்களுக்கு இல்லாமல் இல்லை. ஆட்சி மாற்றத்தால் தமிழ் மக்களுக்கான விமோசனத்தினை அடையமுடியும் என்ற நம்பிக்கையிலேயே சிங்கள தேசத்தில் பல்வேறு உடைவுகளை ஏற்படுத்தி, தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு யாருக்கு ஆதரவளிப்பது என்கின்றதான பிரம்மையை இறுதிவரை உருவாக்கி, இறுதி தருணத்தில் அறிவிப்பை கொடுத்ததும் சம்பந்தன் அவர்களின் அரசியல் சாணக்கியத்தினையே எடுத்துக்காட்டுகின்றது.
எது எவ்வாறிருப்பினும் தமிழ் மக்களுக்கான அடிப்படைக்கொள்கைகளிலிருந்து விலகாது சென்றால் எதிலும் வெற்றி பெறலாம் என்ற பிரபாகரனின் வார்த்தைகளுக்கு அமைய செயற்படுவதன் ஊடாக, தமிழ் மக்களின் அபிலாசைகள் நிறைவேற்றப்பட்டு, சர்வதேசத்தின் ஊடாக இனப்படுகொலைக்கு நியாயமான தீர்வுகள் கிடைக்கப்பெற்று, தமிழினம் தலைநிமிர்ந்து வாழ அது வழியமைக்கும். ஆகவே இவற்றினை நன்கு அறிந்து சம்பந்தன் அவர்கள் செயற்படுவார் என்பது இந்த ஜனாதிபதித் தேர்தலில் அவர் நடந்துகொண்ட முறையின் மூலம் தமிழ் மக்களுக்கு ஒரு நம்பிக்கையினைக் வழங்கியிருக்கின்றது எனலாம்.

இரணியன்

SHARE