சிங்கள பௌத்த மேலாதிக்கத்திலிருந்து தமிழர்களையும், தமிழர்களின் கலை கலாசாரப் பண்பாடுகளையும் காப்பாற்றுவதே ”எழுக தமிழ்” பேரணியின் நோக்கம்

245

 

எமது உணர்வுகளையும் மன வேதனைகளையும் சர்வதேச சமுகத்திற்கு உணர்த்த எழுக தமிழ் பேரணியில் அணிதிரளுங்கள் என தமிழ் மக்கள் பேரவையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

எழுக தமிழ் பேரணி இரண்டு இடங்களில் ஆரம்பமாகவுள்ளது. பல்கலைக்கழக முன்றலில் இருந்தும் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திலிருந்தும் பேரணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இவை பலாலிவீதி இலுப்பையடிச் சந்தியில் ஒன்றாக இணைந்து காங்கேசன்துறை வீதியினூடாக சென்று வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்னால் உள்ள திறந்தவெளியில் நிறைவு பெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் அரசியல் பேதங்களை மறந்து எமது தேவை என்ன,எமது உரிமை என்ன என்பதை ஒருமித்த தமிழர்களின் குரலாக இப்போராட்டதில் வெளிப்படுத்த அனைவரையும் ஒன்றிணையுமாறும் கேட்டுக் கொ‌ண்டனர்.இதன்மூலம் சர்வதேச சமூகத்தை சிந்திக்க வைக்கவும் அரசாங்கத்தை திரும்பிப் பார்க்க வைக்கவும் முடியுமெனவும் அவர்கள் தெரிவித்தனர்.
eluka

இந்த போராட்டத்திற்கு யாழ் பல்கலைக்கழக கல்விச்சமுகம் பூரண ஆதரவை வழங்பகியுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் தெரிவித்தார்.

காலத்தின் தேவைகருதி ஐனநாயக களத்தில் நின்று எமது போராட்டங்களை சர்வதேச சமுகத்திற்கு உணர்த்த அரசியல் பேதங்கள் இன்றி போராட அனைவரையும் ஓன்றுதிரளுமாறு தமிழ் மக்கள் பேரவை இணைத் தலைவர் லக்ஸ்மன் அழைப்பு விடுத்துள்ளார்.

சிங்கள பௌத்த மேலாதிக்கத்திலிருந்து தமிழர்களையும், தமிழர்களின் கலை கலாசாரப் பண்பாடுகளையும் காப்பாற்றுவதே ”எழுக தமிழ்” பேரணியின் நோக்கம்

”எழுக தமிழ்” என்ற மாபெரும் பேரணியின் நோக்கம் சிங்கள பௌத்த மேலாதிக்கத்திலிருந்து தமிழர்களையும், தமிழர்களின் கலை கலாசாரப் பண்பாடுகளையும் காப்பாற்றுவதே என சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவி த்துள்ளதாவது

வடக்கு கிழக்கு பிரதேசங்களை யுத்தத்திற்கு பின்னர் மிக வேகமாக சிங்கள் பௌத்த மேலாதிக்கத்திற்குள் கொண்டுவரக் கூடிய போக்கினை நாம் காண்கின்றோம் .

மேலும், வடக்கு கிழக்கு மாகாணங்களில் சிங்கள பௌத்த மக்கள் இல்லாத இடங்களில் கூட புத்தர் சிலைகளும், பௌத்த விகாரைகளும் இராணுவத்தின் ஆதரவுடன் அமைக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அமைக்கப்படுவதனூடாக சிங்கள, பௌத்த கலாச்சாரத்தை தமிழ் மக்கள் மேல் திணிப்பதுவும் தமிழ் மக்களுடைய கலை பண்பாட்டு கலாச்சாரத்தை அழிப்பதை இந்த அரசாங்கமும் முன்னெடுத்து வருகின்றது..

தற்போது அரசியல் சாசனம் ஒன்று உருவாக்கப்படுகிறது. இந்த அரசியல் சாசனத்தில் வடக்கு கிழக்கு இணைந்த சமஷ்டி அரசியல் சாசனம் உருவாக்கப்பட வேண்டும் என்பது தமிழ் மக்களின் நீண்ட காலக் கோரிக்கையாகவுள்ளது. இந்த ‘எழுக தமிழ்’ பேரணியினூடாக சர்வதேசத்திற்கும் இலங்கை அரசிற்கும் அமையப்போகின்ற அரசியல் சாசனம் சமஷ்டியாக அமைய வேண்டுமென வலியுறுத்துவோம் எனவும் குறிப்பிட்டார்.

எம்முடைய இந்தப் பேரணியானது அமையப் போகும் அரசியல் சாசனத்தை குழப்பி விடுமென்று பலரும் பல்வேறாக கருத்துக்க ளை வெளியிடுகின்றனர். இப்பேரணியின் நோக்கம் சிங்கள, பௌத்த மேலாதிக்கத்திலிருந்து தமிழரையும் தமிழர் கலாசா ரத்தையும் காப்பாற்ற வேண்டு என்பதே எமது நோக்கமாகும்.

மேலும், யுத்தத்திற்கு பிற்பாடு தமிழரின் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் இராணுவம் பிடித்து வைப்பதிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பல ஆண்டுகளாக சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுக்காக நீதியை வேண்டியும் இவ்வாறான பல காரணங்களுக்காகவும் இப்பேரணி நடாத்தப்படுகின்றது.

இப்பேரணியானது தமிழர்களின் பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்தே நடாத்தப்படுகின்றது. இப்பேரணியில் பல கோரிக்கை களை முன்வைத்துள்ளோம். அதாவது, வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டும் தமிழர்களின் சுயநிர்ணயம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் அதனடிப்படையில் சமஷ்டி உருவாக்கப்பட வேண்டும்.

தமிழ் மக்களும் தமிழர்களுடைய வளங்களும் பொருளாதாரமும் திட்டமிடப்பட்ட முறையில் அழிக்கப்பட்டு வருகின்றன. சிங்கள மக்கள் மீன்பிடி வலைகளை அழிக்கின்றனர், கரை வலைப்பாடுகளை ஆக்கிரமிக்கின்றனர், சிங்கள மக்களுக்காக தமிழர்களின் பூர்வீக காணிகள் பிடுங்கப்படுகின்றன. சர்வதேசத்திற்கு இதனை வெளிப்படுத்தும் முகமாக இப் பேரணி அமையும்.

இப்பேரணி தெற்கில் கூட எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் யாழ் வந்த பிரதமர் கூட இப் பேரணி பற்றி ஆவலாக விசாரித்துள்ளார் என சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE