சிறுநீரக விற்பனை தொடர்பான குற்றச்சாட்டின் பின்னணியில் பணி நீக்கம் செய்யப்பட்ட இந்தியர்

277
இலங்கையின் தனியார் மருத்துவமனை ஒன்றில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட உணர்வு இழப்பு மருந்து வழங்கும் இந்தியர் ஒருவரே இலங்கையில் சிறுநீரக விற்பனை என்ற விடயத்தை பின்னின்று பிரசாரப்படுத்தி வருகிறார் என்று அரச மருத்துவர் சம்மேளனம் குற்றம் சுமத்தியுள்ளது.

இலங்கையின் மருத்துவமனை ஒன்றில் பணியபாற்றிய இந்த இந்தியர் பல்வேறு காரணங்களுக்காக நிர்வாகத்தினால் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

இதன்போது அவர் தாம் பணியாற்றிய மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் சிறுநீரக மாற்றுசிகிச்சைகளை தடுக்கப்போவதாக எச்சரித்திருந்தார்.

இதன் அடிப்படையிலேயே அவர் தற்போது செயற்படுகிறார் என்று அரச மருத்துவர் சம்மேளன தலைவர் வைத்திய கலாநிதி நளிந்த ஹேரத் குற்றம் சுமத்தியுள்ளார்.

லங்கையில் சிறுநீரக விற்பனை என்ற அடிப்படையில் இந்தியாவில் விசாரணைகளை நடத்திவரும் பொலிஸ் அதிகாரிக்கு குறித்த இந்தியர் உறவுக்காரர் என்றும் நளிந்த சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை இலங்கை- இந்திய சீபா உடன்படிக்கைக்கு அரச மருத்துவர் சம்மேளனம் எதிர்ப்பை வெளியிடுகின்றமை காரணமாகவே இந்திய ஊடகங்கள் இந்த விடயத்தை பெரிதுப்படுத்துகின்றன என்றும் ஹேரத் குற்றம் சுமத்தியுள்ளார்.

share-kidney-failure

SHARE