சிலியிடம் உதை வாங்கினாலும் தரவரிசையில் முதலிடம் பிடித்த அர்ஜென்டினா!

316
உலக கால்பந்து அரங்கில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிபா) வெளியிட்டுள்ளது.இதில் உலகக்கிண்ணம், கோபா அமெரிக்க கால்பந்து தொடரில் இறுதிப் போட்டி வரை சென்று கிண்ணத்தை தவறவிட்ட அர்ஜென்டினா அணி முதலிடம் பிடித்தது.இதனால் உலகக்கிண்ணத்தை வென்று முதலிடத்தில் இருந்த ஜேர்மனி அணி 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

கோபா அமெரிக்க தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற சிலி அணி, 8 இடங்கள் முன்னேறி 11வது இடத்த்தில் இருக்கிறது.

மேலும் நெதர்லாந்து (5வது இடம்), ருமேனியா (8வது), இங்கிலாந்து (9வது), வேல்ஸ் (10வது) அணிகள் முன்னேற்றம் கண்டுள்ளன.

அதே சமயம் பெல்ஜியம் (3வது இடம்), பிரேசில் (6வது), ஸ்பெயின் (12வது), உருகுவே (13வது) அணிகள் பின்னடைவை சந்தித்துள்ளன.

கொலம்பியா (4வது இடம்), போர்த்துக்கல் (7வது) அணிகள் தங்களது தற்போதைய இடத்தை தக்க வைத்துக் கொண்டன.

SHARE