சிவப்பு அறிவித்தல்’ – வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு

307

 

‘சிவப்பு அறிவித்தல்’ – வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு

v-18

தமது அமைப்பில் எவ்வகையிலும் உறுப்புரிமை பெறாதஇ வவுனியா மக்களால் ‘கூடுமாறும் கவிஞர்’ என்று அழைக்கப்படும் மாணிக்கம் ஜெகன் என்பவரும்இ வவுனியா மக்களால் ‘கொள்ளைக்கண்ணன்’ என்று அழைக்கப்படும் சந்திரகுமார் கண்ணன் என்பவரும்இ கடந்த ஆறு வருடகாலமாக மனித உரிமைகள் சார்பு பணிகளில் இயங்குநிலையிலுள்ள தமது அமைப்பின் பெயரை முறைகேடாகப்பயன்படுத்திஇ பொதுக்குழு கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும்இ

‘வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு – ஏயஎரnலைய ஊவைணைநn ஊழஅஅவைவநந (ஏஊஊ)’ எனும் தமது தமது அமைப்பின் பெயரை இந்த ‘உலுத்தர்கள் ஃமோசடிப்பேர்வழிகள்’ முறைகேடாக பயன்படுத்துவதற்குஇ தமது குழுவின் ஆட்சேபனையையும் – கண்டனத்தையும் – எதிர்ப்பையும் இந்த ‘சிவப்பு அறிவித்தல்’ ஊடாக தெரிவிப்பதாகவும்இ

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திரு.எம்.வி.ரோஹண புஸ்பகுமார அவர்களுக்கு அறிவுறுத்திஇ வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் கோ.ராஜ்குமார்இ செயலாளர் தி.நவராஜ்இ ஊடகப்பேச்சாளர் அ.ஈழம் சேகுவேரா ஆகியோர் ஒப்பமிட்டு அனுப்பி வைத்துள்ள ‘சிவப்பு அறிவித்தல்’ கடிதத்தில் அறிவித்துள்ளனர்.

இந்த ‘சிவப்பு அறிவித்தல்’ கடிதத்தின் பிரதிகள் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன்இ சிவசக்தி ஆனந்தன்இ வைத்தியகலாநிதி சி.சிவமோகன்இ வடக்கு மாகாண சுகாதாரத்துறை அமைச்சர் ப.சத்தியலிங்கம்இ வவுனியா பிரதேச செயலாளர் திரு.க.உதயராசாஇ வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோருக்கும் நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

‘சிவப்பு அறிவித்தல்’ கடிதத்தின் முழுவிவரமும் வருமாறு:

அரசாங்க அதிபர்இ
மாவட்டச்செயலகம்இ
வவுனியா.
01.05.2016

அன்புடையீர்இ
சிவப்பு அறிவித்தல்
எமது அமைப்பின் பெயரை ‘உலுத்தர்கள் ஃ மோசடிப்பேர்வழிகள்’ முறைகேடாக பயன்படுத்துவதற்குஇ எமது குழுவின் ஆட்சேபனையையும் – கண்டனத்தையும் – எதிர்ப்பையும் தெரிவிக்கின்றோம்.

மனித உரிமை பிரகடனத்தில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள சம உரிமைஇ அடிப்படை உரிமைஇ மனித உரிமை என்பவற்றை உறுதிப்படுத்தும் ஒன்றுபட்ட சமாதான பிரச்சினைகளற்ற சுயநிறைகொண்ட ரீதியான ஒரு தேசத்தை கட்டியெழுப்புவதை தொலைநோக்காகக்கொண்டுஇ கடந்த ஆறு வருடகாலமாக ‘வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு – ஏயஎரnலைய ஊவைணைநn ஊழஅஅவைவநந (ஏஊஊ)’ என்ற பெயரில் எமது அமைப்பு செயல்பட்டு வருகின்றது.

எமது அமைப்பில் எவ்வகையிலும் உறுப்புரிமை பெறாதஇ மாணிக்கம் ஜெகன் என்பவரும்இ சந்திரகுமார் கண்ணன் என்பவரும்இ கடந்த ஆறு வருடகாலமாக இயங்குநிலையிலுள்ள எமது அமைப்பின் பெயரை முறைகேடாகப்பயன்படுத்திஇ பொதுக்குழு கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இது எமது அமைப்பின் கடந்தகால மக்கள் நலப்பணிகளுக்கும் – குழுவின் நன்மதிப்புக்கும் களங்கத்தையும் – அகௌரவத்தையும் ஏற்படுத்தும் சமுக விரோத செயல்பாடாகும்.

இந்த சமுக விரோத செயல்பாட்டுக்கு மாவட்டத்தினுடைய அரசாங்க அதிபராகிய தாங்களும்இ வவுனியா பிரதேச செயலாளர் திரு.க.உதயராசா ஐயா அவர்களும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக பகிரங்கமாக தெரிவித்தேஇ இவர்கள் எமது அமைப்பின் பெயரில் பொதுக்குழு கூட்டத்துக்கு அழைப்பு விடுத்து துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து வருகின்றனர்.

எமது அமைப்பின் பெயரை இந்த ‘உலுத்தர்கள் ஃ மோசடிப்பேர்வழிகள்’ முறைகேடாக பயன்படுத்துவதற்குஇ எமது குழுவின் ஆட்சேபனையையும் – கண்டனத்தையும் – எதிர்ப்பையும் இந்த ‘சிவப்பு அறிவித்தல்’ ஊடாக தெரிவிக்கின்றோம்.

வவுனியா மாவட்ட தமிழ் மக்களிடம் அவ்வளவு நல்ல பெயரை சம்பாதித்துக்கொள்ளாத முன்னாள் அரசாங்க அதிபர் திரு.பந்துல ஹரிச்சந்திர அவர்கள் கூடஇ தனது சேவைக்காலத்தில் சிவில் சமுக மனித உரிமை அமைப்புகளை இவ்வாறு பலவீனப்படுத்தும் ‘அநாகரிக – அநாமதேய நடத்தைகளில்’ ஈடுபடவில்லை என்பதையும் தங்களின் மேலான கவனத்துக்காக சுட்டிக்காட்டுகின்றோம்.

அவரைப்போலவேஇ கற்றுத்தேர்ந்த கல்விப்பாரம்பரியத்தினூடாக அரச சேவையாற்றும் தாங்களும்இ நெறி பிறழ்வு நடத்தைகளால் சமுக நம்பகத்தன்மையை இழந்துள்ள இவ்வாறான மோசடிப்பேர்வழிகளின் செயல்பாடுகளுக்கு ஒத்துழைப்பும் – அனுசரணையும் வழங்கிஇ தங்களது சுயகௌரவத்தையும் – நன்மதிப்பையும் கெடுத்துக்கொள்ள மாட்டீர்கள் என்றும் நாங்கள் பெரிதும் நம்புகின்றோம். தயவுசெய்து இது தொடர்பில் தாங்கள் விரைந்து காத்திரமான நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் என்றும் வலியுறுத்தி வினவுகின்றோம்.

வவுனியா மாவட்ட மக்களால் நன்கு அறியப்பட்ட இந்த இரண்டு பெரும் மோசடிப்பேர்வழிகளும்இ எமது அமைப்பின் பெயரை பயன்படுத்திஇ வைரவப்புளியங்குளத்தில் அமைந்துள்ள முத்தையா கலாசார மண்டபத்தில் 14.05.2016 சனிக்கிழமைஇ பி.ப 3.00 மணிக்கு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.

முறைகேடான இந்த அறிவிப்பால்இ எமது குழுவின் தலைமைக்குழு உறுப்பினர்களும்இ மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் அங்கத்துவம் பெறும் நூற்றுக்கும் அதிகமான தொண்டர்களும்இ ஆதரவாளர்களும் – பயனாளிகளும்இ குறித்த சமுக அநீதிக்கு எதிராக அதிஉச்ச கோப உணர்வு நிலையில் காணப்படுகின்றனர்.

எனவே மோசடிப்பேர்வழிகள் அறிவித்துள்ளவாறுஇ எமது அமைப்பின் பெயரைப்பயன்படுத்தி பொதுக்கூட்டம் நடத்தப்பட்டாலோ அன்றிஇ எமது அமைப்பின் ‘வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு – ஏயஎரnலைய ஊவைணைநn ஊழஅஅவைவநந (ஏஊஊ)’ என்ற பெயரால் இன்னும் ஒரு குழுவை உருவாக்க முயற்சித்தாலோ இருதரப்புக்கும் மோதல்கள் ஏற்பட்டுஇ அது கலகமாக உருப்பெற்றுஇ பொது அமைதிக்கு ஊறுவிளைவிக்கும் வாய்ப்புகள் நிறையவே உண்டு என்பதையும் தாங்கள் கவனத்தில் கொள்ளுமாறு அறியத்தருகின்றோம்.

உண்மையாய்… உரிமையாய்… உணர்வாய்…
மக்கள் நலப்பணியில்இ
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினர்

பிரதிகள்:
கௌரவ. செல்வம் அடைக்கலநாதன்இ பா.உஇ வன்னி மாவட்டம். (நடவடிக்கைக்காக)
கௌரவ. சிவசக்தி ஆனந்தன்இ பா.உஇ வன்னி மாவட்டம். (நடவடிக்கைக்காக)
கௌரவ. வைத்தியகலாநிதி சி.சிவமோகன்இ பா.உஇ வன்னி மாவட்டம். (நடவடிக்கைக்காக)
கௌரவ. ப.சத்தியலிங்கம்இ சுகாதாரத்துறை அமைச்சர்இ வடக்கு மாகாணம். (நடவடிக்கைக்காக)
திரு.க.உதயராசாஇ பிரதேச செயலாளர்இ வவுனியா. (நடவடிக்கைக்காக)
பொறுப்பதிகாரிஇ பொலிஸ் நிலையம்இ வவுனியா. (நடவடிக்கைக்காக)

SHARE