சீனாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று நான்கு நாட்கள் விடுமுறை தினத்தை கொண்டாடுவதற்காக 6400 ஊழியர்களை பிரான்சுக்கு சுற்றலா அழைத்துச் சென்றுள்ளது.

343

 


பொதுவாக ஒரு கல்லூரியில் இருந்து வெளியூருக்குச் சுற்றுலா செல்லுவதாக வைத்துக்கொள்வோம். சுமார் 100 அல்லது 200 மாணவர்கள் சுற்றுலா செல்வார்கள். அவர்களுக்கு எந்தவிதமான பிரச்சினையும் ஏற்படாமல் திரும்பி அழைத்து வருவதற்குள் ஆசிரியருக்கு போதும்போதும் என்றாகி விடும். ஆனால், சீனாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று நான்கு நாட்கள் விடுமுறை தினத்தை கொண்டாடுவதற்காக 6400 ஊழியர்களை பிரான்சுக்கு சுற்றலா அழைத்துச் சென்றுள்ளது.

10438317_989956361023856_2040497854867005690_n 11059558_989956211023871_5989616588241551855_n

சீனாவில் டைன்ஸ் என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் சுற்றுலா, வணிகம் மற்றும் அழகுச் சாதனம் தயாரித்தல் போன்ற தொழில்களை செய்து வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலைப்பார்க்கிறார்கள். இதில் 6400 பேரை அந்த நிறுவனத்தின் தலைவர் லி ஜின்ஜுயான் பிரான்சுக்கு விடுமுறை சுற்றலாவிற்கு அனுப்பியுள்ளார்.

அவர்கள் தங்குவதற்கு கேன்ஸ் மற்றும் மொனாகோ நகரில் உள்ள 140 ஒட்டல்களில் 4700 அறைகளை வாடகைக்கு எடுத்துள்ளார். அவர்கள் சுற்றிப் பார்ப்பதற்காக 146 பஸ்களை வாடகைக்கு அமர்த்தியுள்ளார்.

கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறும் பொருட்டு இதற்கு முன்பு படைத்திருந்த கின்னஸ் சாதனையை முறியடிக்கும் வகையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று 6400 பேரும் சேர்ந்து நின்று நீண்ட வார்த்தையை உருவாக்கியிருந்தனர். இதை கின்னஸ் சாதனை கண்காணிப்பார்கள் பார்வையிட்டு சென்றுள்ளனர்.

இதற்காக லி ஜின்ஜுயான் சுமார் 14.6 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 90 கோடி ரூபாய்) செலவிட்டுள்ளார்.

SHARE