சீனா கலைஞரின் புகைப்படத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு

265
சீனா புகைப்பட கலைஞர் ஒருவர் வெளியிட்ட புகைப்படத்திற்கு பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சீனாவின் பிரபல புகைப்பட கலைஞரான Ai Weiwei தொடர்ந்து பல அரியவகை புகைப்படங்களை வெளியிட்டு விருதுகளை குவித்துவருபவர்.

ஆனால் அவரது புதிய வெளியீடான புகைப்படம் ஒன்று பொதுமக்களிடையே கடுத்த எதிர்ப்பை எதிர்கொண்டுள்ளது.

அவரது படைப்பினை தரக்குறைவானதாக குறிப்பிட்டுள்ள விமர்சகர்கள், புகைப்பட கலைஞர் Ai அவமரியாதை செய்துள்ளதாகவும் சாடியுள்ளனர்.

துருக்கி கடற்பகுதியில் கரை ஒதுங்கிய அகதிச்சிறுவன் Aylan Kurdi போன்று புகைப்பட கலைஞரும் சமூக ஆர்வலருமான Ai Weiwei மறு உருவாக்கம் செய்துள்ளார்.

உலக அளவில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்திய அந்த சம்பவத்தை மறு உருவாக்கம் செய்திருப்பதன் மூலம் புகைப்பட கலைஞர் Ai அந்த சிறுவனை அவமரியாதை செய்துள்ளதாக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Lesbos பகுதியில் தங்கியிருந்து அகதிகள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் கருத்தாக்கங்களை தற்போது வெளியிட்டு வரும் இவர்,

துருக்கியில் சென்ற போது அங்குள்ள புகைப்பட கலைஞரும் பத்திரிகையாளருமான ஒருவர் தம்மிடம் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்தே இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது என அவர் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ள புகைப்படத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதை அடுத்து டென்மார்க் அருங்காட்சியகத்தில் இருந்து அந்த புகைப்படத்தை அப்புறப்படுத்த இருப்பதாக Ai தெரிவித்துள்ளார்.

SHARE