சுனாமியில் உறவுகளை இழந்து அனாதையாக நின்ற சிறுவனை கால்பந்து வீரனாக்கி அழகு பார்த்துள்ளார் போர்த்துக்கல் அணியின் வீரர் ரொனால்டோ.

325
சுனாமியில் உறவுகளை இழந்து அனாதையாக நின்ற சிறுவனை கால்பந்து வீரனாக்கி அழகு பார்த்துள்ளார் போர்த்துக்கல் அணியின் வீரர் ரொனால்டோ.கடந்த 2004ம் ஆண்டு தாக்கிய சுனாமியில் உலகம் முழுவதும் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.இதில் சுனாமியில் அதிக அழிவுகளை சந்தித்த இந்தோனேஷியாவின் ஏக் கடற்கரை பகுதியில் 21 நாட்களுக்கு பிறகு மட்டுனிஸ் என்ற 3 வயது சிறுவன் அதிருஷ்டவசமாக உயிருடன் மீட்கப்பட்டான்.

இச்சிறுவனை மீட்க அவன் அணிந்திருந்த போர்த்துக்கல் அணி வீரர் மனுவேல் ரய் கோஸ்ட்டாவின் ஜெர்சி தான் காரணமாக இருந்தது. அந்த ஜெர்சியுடன் கடற்கடை ஓரமாக மண்ணில் புதையுண்டு கிடந்த மட்டுனிஸ் உயிருடன் மீட்கப்பட்டுள்ளான்.

இதன் பிறகு ஒரு ஊடகத்திற்கு அவன் அளித்த பேட்டியில், தனது குடும்பத்தினரை சந்திப்பதும் கால்பந்து வீரராவதும் தான் தனது கனவு என்று கூறினான்.

அவனது உறவினர்கள் யாரும் உயிருடன் இல்லை. ஆனால் அவனது கால்பந்து ஆசையை அறிந்த போர்த்துக்கல் அணி, அவனது கனவை நிறைவேற்றும் பணியில் களமிறங்கியது.

அதிலும் போர்த்துக்கல் அணியின் அணித்தலைவர் ரொனால்டோ, மட்டுனிஸிக்கு இந்தோனேஷியாவில் தேவையான அனைத்து உதவிகளையும் பார்த்து பார்த்து செய்தார்.

மேலும், இந்தோனேஷியா செல்லும் போதெல்லாம் ரொனால்டோ மட்டுனிசை சென்று பார்த்து அவனது வளர்ச்சியில் தனி அக்கறை காட்டி வந்தார்.

தற்போது 17 வயது இளைஞனான மட்டுனிஸ், போர்த்துக்கல் நாட்டின் புகழ்பெற்ற ஸ்போர்ட்டிங் லிஸ்பன் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளான்.

இதே ஸ்போர்ட்டிங் லிஸ்பன் அணியில் தான் ரொனால்டோவும் முதன்முதலில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

SHARE