சுற்றுலாப்பயணிகளை தாக்கி கொள்ளையிடும் கும்பல்

294
பிரேசிலின் சுற்றுலாத்தலமான ரியோ டி ஜெனிரோவில் வரும் சுற்றுலாப்பயணிகளை தாக்கி கொள்ளையிட்டு தப்பும் கும்பலால் சுற்றுலாப்பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் சிறுவர்கள் அடங்கிய கொள்ளை கும்பலால் சுற்றுலாப்பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

சுற்றுலாப்பயணிகளிடம் இருந்து கழுத்துச்சங்கிலிகள், கடிகாரங்கள் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையிடும் நோக்கில் அவர்களை இந்த கொள்ளை கும்பல் பட்டப்பகலில் தாக்குவதாக கூறப்படுகிறது.

பயணிகளை தாக்கி கொள்ளையிடுவதை அப்பகுதியில் கடை வைத்திருக்கும் நபர் ஒருவர் தமது கமெராவில் ரகசியமாக பதிவு செய்துள்ளார்.

கொள்ளையிடும் கும்பலில் இருக்கும் இளைஞர்கள் விலை உயர்ந்த பொருட்களை எப்படி நோட்டமிட்டு பறிக்க வேண்டும் என இளையவர்களுக்கு விளக்கமளிக்கின்றனர்.

இச்சம்பவம் குறித்து விளக்கமளித்த ரியோ நகரின் மேயர், நகரில் பல பகுதிகளில் இதுபோன்ற கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதை ஒப்புக்கொண்டார்.

மேலும், இது குறித்து அதிக கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இன்னும் 8 மாதத்தில் பிரேசிலில் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

SHARE