சுவிஸ் நாட்டிற்கு கோடிகளை அள்ளி தரும் சார்லி சாப்ளின்

288

 

சுவிட்சர்லாந்து நாட்டில் அண்மையில் திறக்கப்பட்ட சார்லி சாப்ளின் அருங்காட்சியகம் மூலம் அந்நாட்டு சுற்றுலா துறைக்கு கோடிக்கணக்கில் வருமானம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலக ரசிகர்களை தனது நகைச்சுவையால் கட்டிப் போட்ட சார்லி சாப்ளின் தனது கடைசி 25 ஆண்டுகளை மனைவி மற்றும் பிள்ளைகளுடன் சுவிஸ் நாட்டில் தான் வசித்தார்.

ஜெனிவா ஏரிக்கு அருகில் சாப்ளின் வசித்து வந்த ஆடம்பரமான வீடு கடந்த ஏப்ரல் மாதம் Chaplin’s World என்ற பெயரில் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது.

இந்த அருங்காட்சியகத்தில் சார்லி சாப்ளின் பயன்படித்திய பொருட்கள், அவர் நடித்த படங்களின் தொகுப்பு, சார்லி சாப்ளின் பற்றிய முக்கிய குறிப்புகள் உள்ளிட்ட ஏராளமானவை இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

ஏப்ரல் மாதம் தொடங்கி ஒவ்வொரு மாதமும் இந்த அருங்காட்சியகத்திற்கு 25 ஆயிரம் சுற்றுலா பிரியர்கள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்து செல்கின்றனர்.

இதனால் இப்பகுதி ஐரோப்பாவிலேயே ஒரு முக்கிய சுற்றுலா தளமாக மாறிவருவதுடன் சுவிஸ் நாட்டு சுற்றுலா துறைக்கு கோடிக்கணக்கான வருவாயும் கிடைப்பதாக அருங்காட்சியகத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

SHARE