சுவிஸ் வெளிவிவகார அமைச்சர்- வடக்கு முதல்வர் சந்திப்பு

466

 

சுவிஸ் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் டிடீயர் புர்கால்ட்டர் (Didier Burkhalter) தலைமையிலான குழுவினருக்கும் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்றைய தினம் இடம்பெற்றிருக்கின்றது.

குறித்த சந்திப்பு இன்றைய தினம் காலை 10.30 மணியளவில் முதலமைச்சரின் யாழ்.அலுவலகத்தில் நடைபெற்றிருந்தது.

இச்சந்திப்புத் தொடர்பாக முதலமைச்சர் கருத்து வெளியிடுகையில்,

ஆட்சிமாற்றத்தின் பின்னர் இலங்கையில் எவ்வாறான சூழ்நிலை நிலவுகின்றது? என அவர்கள் எங்களிடம் கேட்டிருந்தார்கள்.

குறிப்பாக சூழ்நிலைகளில் மாற்றம் நிலவுகின்றது என்பதனை நாங்கள் கூறியிருக்கின்றோம்.

அதற்கு அவர், சற்று தாமதமாகவேனும் சூழ்நிலையும், மனோநிலையும் மாற்றமடைந்தால் பலவிதமான நன்மைகள் கிடைக்கும் என கூறினார்.

மேலும் நாங்கள் எங்கள் மக்கள் எதிர்கொள்ளும் பலவிதமான பிரச்சினைகள் குறித்த எடுத்துக்காட்டியிருந்தோம்.

அதனை அவர்கள் ஒத்துக்கொண்டதோடு. அவை தொடர்பில் தாங்கள் அறிந்திருப்பதாகவும் கூறியிருக்கின்றார்கள்.

மேலும் சுவிஸ் அரசாங்கம் வடமாகாணத்தில், மேற்கொள்ளும் அபிவிருத்தி செயற்றிட்டங்கள் தொடர்பிலும் எடுத்துக்காட்டியதுடன், தங்களிடமிருந்து எவ்வாறான நன்மைகளை எதிர்பார்க்கிறீர்கள்? என கேட்டிருந்தார்.

அதற்கு நாங்கள் திறன் விருத்தி தொடர்பில் சில தேவைகள் இருப்பதை கூறியிருந்தோம். அந்தவகையில் எமது கோரிக்கையினை தாம் சாதகமாக பரிசீலிப்பதாக கூறியிருக்கின்றார்கள். மேலும் இந்த நாட்டில் அமைதியும், மக்கள் மத்தியில் மகிழ்ச்சியையும், தாம் பார்ப்பதாகவும் எதிர்காலம் மகிழ்ச்சியானதாக அமையும் எனவும் கூறியதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

SHARE