சென்னையில் விராட் கோஹ்லி: ஆரம்பமாகும் அடுத்த சவால்

332
இந்தியா ‘ஏ’- அவுஸ்திரேலியா ‘ஏ’ அணிகள் மோதும் அதிகாரப்பூர்வமற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னையில் இன்று தொடங்குகிறது.இதில் இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி விளையாடுவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.இந்தியா வந்துள்ள அவுஸ்திரேலியா ‘ஏ’ அணி புஜாரா தலைமையிலான இந்திய ‘ஏ’ அணியுடன் அதிகாரப்பூர்வமற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. இதன் முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது.இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.

இதில் இலங்கை சுற்றுப்பயணத்திற்கு முன்னோட்டமாக இந்திய ‘ஏ’ அணியில் விராட் கோஹ்லி களமிறங்குகிறார்.

சென்னை சூழலும், இலங்கை சூழலும் ஒரே மாதிரி இருக்கும் என்பதால், அவர் இந்த போட்டியில் பங்கேற்க முடிவு செய்துள்ளார்.

SHARE