செய்தியாளர்களை தாக்கி கொள்ளையடிக்க முயன்ற அகதிகள்

287
பிரான்ஸில் செய்தியாளர்களை தாக்கி கொள்ளையடிக்க முயன்ற அகதிகளை சக அகதிகள் விரட்டியடித்தனர்.

பிரித்தானியாவுக்கு  செல்ல முயலும் அகதிகள் பிரான்ஸ் எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்படுவதையடுத்து பிரான்ஸின் கலேய்ஸ் பகுதியில் கூடாரம் அமைத்து வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் டச் ஊடகவியலாளரான மைக்கி ஏங்கல்ஸ் என்பவர் கலெய்ஸ் பகுதியில் வசிக்கும் அகதிகள் பற்றி ஆவணப்படம் எடுக்க முடிவு செய்தார்.

இதையடுத்து தனது நண்பரை அழைத்துக்கொண்டு அகதிகள் அகதிகள் வசிக்கும் பகுதிக்கு சென்றுள்ளார்.

அப்போது கையில் கத்தி, மிளகு ஸ்பிரே ஆகியவையுடன் அங்கு வந்த மூன்று அகதிகள் அவர்களை தாக்கி காமெரா மற்றும் ஏனைய பொருட்களை பறிக்க முயன்றுள்ளனர்.

இந்நிலையில் அங்கு வந்த சக அகதிகள் கொள்ளையில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்து ஏங்கல்ஸ் மற்றும் அவரது நண்பரை காப்பாற்றினார்கள்.

இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் ஏங்கல்ஸ் எழுதியுள்ளதாவது, அனைத்து இனங்களிலும் நல்லவர்கள் இருக்கின்றனர். எனினும் அவர்களுடனே சில கெட்டவர்களும் உள்ளனர்.

இது போன்ற அசாதாரண சூழ்நிலைகளில் வாழ்பவர்கள் சிறிய குற்றவாளிகளாக ஆகுவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்று தெரிவித்துள்ளார்.

சமீப நாட்களாக அகதிகள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் ஊடகவியலாளர்களை தாக்கி கொள்ளையடிக்க முயன்ற அகதிகளின் செயல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SHARE