செல்போனில் பேசும் போது நீங்கள் செய்யும் தவறுகள்!.. இனிமேலாவது திருத்திக் கொள்ளலாமே…

267

06-1365240738-4-dating66277

ஒரு எண்ணைச் சுழற்றிவிட்டு எதிர்முனைக்கு ரிங் போகிறதா? என்று காதில் வைத்துக் கேட்டுக் கொண்டே இருப்பது தவறு. அந்த வேளையில்தான் கதிர்வீச்சு மற்றும் மின்காந்த அதிர்வுகள் கூடுதலாக இருக்கும். அது உங்கள் காதுகளையும், மூளையையும் கடுமையாக பாதிக்கும். எனவே, எண்களைச் சுழற்றியதும் கை பேசியை முகத்துக்கு சற்றே தள்ளிப் பிடித்து இணைப்பு கிடைத்துவிட்டதை அறிந்ததும் காதில் வைத்துப் பேசுவது நல்லது.

வீட்டிலும் அலுவலகத்திலும் செல்பேசியை உங்கள் சட்டைப்பையிலோ, கையிலோ சுமந்து கொண்டிராமல், நான்கடி தள்ளி கண்ணில் படும்படி எங்காவது வையுங்கள். பேசும்போது மட்டும் எடுத்துப் பேசுங்கள். இதனால் அதன் கதிர்வீச்சிலிருந்து தப்பலாம்.

இரவு உறங்கச் செல்லும்போது முக்கிய அழைப்பு வரும் என்று எதிர்பார்த்து தலைக்கு அருகிலேயே கைபேசியை வைத்துக் கொண்டு தூங்குவது மிகத் தவறு. அது மூளையைத் தாக்கி, நிம்மதியான உறக்கத்தைத் தடுக்கும். ஆறு மணி நேர நிம்மதியான ஓய்வை உடலுக்கும் மூளைக்கும் தர வேண்டுமானால் இதைத் தவிர்த்து விடவும்.

இதய அறுவை சிகிச்சை செய்து இதயத்துடிப்பு கருவி (பேஸ்மேக்கர்) பொருத்தியிருப்பவர்கள் அதிக நேரம் செல் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். செல்போனின் அலைவீச்சு, இந்தக் கருவியின் இயக்கத்துக்கு மிகுந்த இடையூறு செய்யும்.

பெருமழை பெய்யும் போதும், இடி தாக்கும் போதும், மின்னல் வெட்டும் போதும் செல்போனில் பேசுவதைத் தவிர்த்தல் சாலச் சிறந்தது. அந்த வேளைகளில் அலைபேசி ஒரு இடதாங்கி போலச் செயல்பட்டு, இடி, மின்னல உங்களை நோக்கி ஈர்த்துவிடும் அபாயம் உண்டு என்பதை மனதில் வையுங்கள்.

முடிப்பதற்கு முன்… போனஸாக ஒரு ஆச்சர்யத் தகவல் உங்களுக்கு! ‘‘இனி எதிர்காலத்தில் ஒவ்வொருவரின் சட்டைப் பையிலும் ஒரு தந்திக் கருவி இருக்கும்’’ -இப்படி செல்போன்களின் தினசரிப் பயன்பாட்டை யூகித்து 1930ம் ஆண்டிலேயே சொன்னார் ஒருவர். அவர் யார் என்பதை அறிவீர்களா…? வெளிநாட்டறிஞர் எவரும் இல்லீங்க… தந்தை பெரியார் என்று தமிழர்கள் அழைக்கும் ஈ.வெ.ராமசாமி அவர்கள் 1930ம் ஆண்டில் தொலைநோக்குப் பார்வையுடன் வெளியிட்ட கருத்து இது!.

 

SHARE