சொந்த குடிமக்களையே கொன்ற ‘நாசிச’ படை: அம்பலமான ஆவணங்கள்

344
ஜேர்மனியின் நாசிச படையினர் தயாரித்த ஏவுகணைகளை தனது சொந்த குடிமக்கள் மீது ஏவி பரிசோதனை செய்ததாக அதிர்ச்சியளிக்கும் ஆவணங்கள் தற்போது வெளியாகியுள்ளன.இரண்டாம் உலகப்போர் ஏற்பட முக்கிய காரணமாக இருந்த ஹிட்லரின் சர்வாதிகார ஆட்சியில் நீர்மூழ்கி கப்பல்கள், போர் விமானங்கள், ஏவுகனைகள் உள்ளிட்டவைகளை ஜேர்மனி தயாரித்தும் இறக்குமதி செய்தும் வந்துள்ளது.

போர் நடைபெற்று வந்த 1944 ஆம் ஆண்டுகளில் ஜேர்மனி அரசு Vergeltungswaffe 2(V2) என்ற அதிநவீன ஏவுகணையை தயாரித்திருந்தது.

இந்த ஏவுகணை வெற்றிகரமாக செயல்படுமா என பரிசோதனை செய்ய திட்டமிட்ட நாசிச படை வீரர்கள், அதை தனது சொந்த நாட்டு மக்கள் வசிக்கும் நகரத்தின் மீது ஏவி வெடிக்க செய்துள்ளனர்.

பரிசோதனை முடிந்த பின், ஏவுகணை எந்தளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என ஆய்வு செய்து சுமார் 9,000 மக்கள் கொல்லப்பட்டதாக ஒரு ஆவணத்தில் குறிப்பு எழுதி வைத்திருந்தது.

இந்த ஆவணம் தான் தற்போது முதன் முதலாக வெளியாகியுள்ளது. இந்த ஆவணத்தில் V2 வகையை சேர்ந்த ஏவுகணைகளை அடுத்தடுத்து ஏவியதாகவும், அவைகள் செயல்பட்ட விதம், பாதிப்பு உள்ளிட்டவைகள் குறிப்புகளாக உள்ளன.

இரண்டாம் உலகப்போரில் V2 வகை ஏவுகணைகளின் பயன்பாடு 1944 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டாலும், அவைகளை பரிசோதனை செய்தது 1945 வரை நீடித்துள்ளது.

பரிசோதனை முயற்சிகள் முடிந்தவுடன் அந்த ஆவணங்களை சில அதிகாரிகள் எரித்து அழிக்க முயற்சி செய்துள்ளனர். தற்போது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஆவணங்களின் ஓரங்களில் தீப்பற்றிய அடையாளங்கள் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.

தனியார் நிறுவன அதிகாரிகளிடம் சிக்கிய ஆவணங்கள் தற்போது பிரித்தானியாவில் ஏலத்தில் விடுவதற்காக வைக்கப்பட்டுள்ளது.

SHARE