சோற்றுக்காக பிழைப்பு நடத்துபவர்களே வவுனியாவில் புதிய பிரஜைகள் குழுவினை உருவாக்கியுள்ளனர்-பிரஜைகள் குழுவின் தலைவர் தேவராஜா சீற்றம்

309

 

2012ஆம் ஆண்டு தொடக்கம் பிரஜைகள் குழுவானது பல சிரமங்களுக்கு மத்தியிலும் செயற்பட்டு வருகின்றது.

citizens-committee-of-vavuniya

இதனது செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் இராணுவப் புலனாய்வினர், விசேட அதிரடிப்படையினர், அரசின் உயர்மட்டக்குழுக்கள் போன்றவை செயற்பட்டு வந்தன. இப்பிரஜைகள் குழுவின் செயற்பாடுகளுக்கு அயராது பாடுபட்டு அதனை சிறந்த வளர்ச்சிப்பாதைக்குக் கொண்டு வந்தவர் சன் மாஸ்ரர் என்பவர்.

1111

இவர் கடந்த 2004,2005களில் இராணுவப் புலனாய்வினரால் தேடப்பட்டு வந்த நிலையில் தலைமறைவானமை அனை வரும் அறிந்தவொன்றே.

பிரஜைகள் குழுவின் தலைமைப் பொறுப்பினை சன் மாஸ்ரர் அவர்களே என்னிடம் வழங்கியிருந்தார் என்கிறார் தேவராஜா.

4419af34-c0dc-40f0-aebc-7bd209995ff5

அதன் பின்னர் பல சிரமங்களுக்கு மத்தியில் 2012ஆம் ஆண்டு தெரிவுசெய்யப்பட்ட குழுவிலிருந்து பலர் அச்சுறுத்தல்கள் காரணமாக விலகிச்சென்றிருந்தனர். இதனை நானும் என்னுடன் இருந்த ஒருசிலருமே மிக நுட்பமான முறையில் செயற்படுத்தி வந்தோம். மிக சிறப்பாக இயங்கிவந்த இந்த பிரஜைகள் குழு எமது அங்கத்தவர்களுக்கிடையில் ஏற்பட்ட ஒருசில மனக்குழப்பங்கள் காரணமாக இதனை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட மாணிக்கம் ஜெகன், கண்ணா போன்றவர்கள் ஏற்கனவே இயங்கிவரும் பிரஜைகள் குழுவைச் சீர்குலைக்கும் நோக்கில் 14.05.2016அன்று வவுனியா முத்தையா மண்டபத்தில் புதிய பிரஜைகள் குழுவொன்றினை உருவாக்கியுள்ளனர். எதிர்வரும் காலங்களில் தமது சுயநல அரசியலை நகர்த்திச் செல்வதற்காகவும், தமது வயிற்றுப் பிழைப்புக்காகவுமே இவர்களது செயற்பாடுகள் அமையப்போகிறது.

unnamed-1-300x200

இதற்கு ஆதரவாளர்களாக ஒரு சில ஊடகவியலாளர்களும் பின்னின்று செயற்படுவதென்பது ஊடகத்தின் நடுநிலைமைத்தன்மையில் பின் வாங்கிச் செயற்படுகின்றனர் என்றே நான் கருது கிறேன்.
பிரஜைகள் குழுவினர் நிர்வாகத் தினரைக் கலைத்து புதியவர்களைத் தெரிவு செய்யவில்லை. அவ்வாறு நான் கலைக்கவுமில்லை. 2012ஆம் ஆண்டில் தெரிவுசெய்யப்பட்ட அணியினர் தற்போதும் செயற் படுகின்றனர்.

இவர்களின் பெயர் விபரம் பின்வருமாறு:- ராஜ்குமார், சேகு வேரா, நவராஜ், ராஜேந்திரகுமார், நடராஜ், பாலசூரியம்மா இவ்வாறு பலரும் இந்நிர்வாகத்தில் இன்னமும் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே பிரஜைகள் குழுவினது பெறுமதி தெரியாதவர்கள் பிரஜைகள் குழுவினை பிளவுபடுத்தும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளனர் என்றே நான் கருதுகிறேன்.

vavuniya-may-18-4 vavuniya-may18-180815-praijaikalkulu-380

இதுவரை நாம் 42 போராட்டங்களை நடாத்தியிருக்கின்றோம்.

mavai-vavuniya-seithy-1-20130716-403 mavai-vavuniya-seithy-2-20130716-403 vavuniya-211114-seithycom (1)

vavuniya-may-18-1 vavuniya-may-18-2 vavuniya-may-18-4 vavuniya-may-18-5 vavuniya-may-18-6

q1-23

மிக இக்கட்டான சூழ்நிலைகளிலேயே இவை நடைபெற்றது. இறந்தவர்கள், காணாமற்போனவர்கள், கடத்தப் பட்டவர்கள், உயிரிழந்த போராளிகள், சிறைக்கைதிகளின் விடுதலை, மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் முன்னாள் ஆர்ப்பாட்டங்கள் இவ்வாறு பலவற்றைச் சந்தித்த இந்த பிரஜைகள் குழுவினர், எந்த ஆர்ப்பாட்டமும் வலி யையும் உணராதவர்கள், இராணுவ ஒட்டுக்குழுக்களுடன் இணைந்து முகாம்களில் செயற்பட்டவர்கள், தமிழினத்தை விற்றுப்பிழைத்தவர்கள், வீதிகளில் சுற்றித்திரிபவர்கள், கொள்ளையடித்தவர்கள் எனப்பலரும் இன்று ஆளுக்கொரு பிரஜைகள் குழு வினை ஆரம்பிக்கின்றார்கள் எனில் அதனை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. மிக இக்கட்டான சூழ்நிலைக்கு இப்பிரஜைகள் குழு செல்கின்றபோது இவர்கள் எங்கிருந்தார்கள்? இவர்களது செயற்பாடுகள் எவ்வாறிருந்தது? இவர்கள் யாரது பின்னணியில் செயற்படுகிறார்கள் என்பதும் எமக்குத் தெரியும்.
2014ஆம் ஆண்டு காலப்பகுதியில் இராணுவப்புலனாய்வினரால் நான் தாக்கப்பட்டிருந்தேன். 2015ஆம் ஆண்டு 4ம் மாடிக்கான அழைப்பானை எனக்குப் பிறப்பிக்கப்பட்டது. அதன் பின்னர் தொலைபேசியினூடாக கொலைமிரட்டல்கள், இந்த பிரஜைகள் குழுவினர் செல்லும் இடமெல்லாம் இராணுவப் புலனாய்வாளர்கள் பின்தொடர்ந்தனர். இப்பொழுது அவ்வாறான செயற்பாடுகள் இல்லை. இதனையும் கருத்திற்கொண்டு இராணுவப் புலனாய்வாளர்களால் திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர்களே இவர்கள். புதிதாக தெரிவுசெய்யப்பட்ட பிரஜைகள் குழுவினர் தொடர்பில் நாம் அலட்டிக்கொள்ளவேண்டிய தேவை இல்லை. இருந்தும் ஏற்கனவே செயற்பட்டுவந்த பிரஜைகள் குழுவிற்கும் எனக்கும் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக தலைவர் என்ற ரீதியில் அவர்களைக் கண்டித்தேன். அவர்கள் தற்போது மனித உரிமை நடவடிக்கைகளிலும் தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்பதிலும் நேர்த்தியாகச் செயற்பட்டுவருகின்றார்கள். இப் புதியவர்கள் வருங்காலத்தில் தாம் ஒரு அரசியற்கட்சியாக வருவதற்கும் தாம் சார்ந்த ஒருவர் வேட்பாளராக நிற்பதற்கும் திட்டமிட்ட முறை யில் இக்காய்நகர்த்தல்கள் நகர்த்தப் படுகின்றன. 17 நாட்களுக்கு முன்பு புதிதாக பிரஜைகள் குழு தெரிவுசெய்யப்போகின்றோம் என எனக்கு அழைப்பு விடுத்திருந்தார்கள்.

vavuniya-maveerarnal-06

அப்போதே நான் மறுப்புத் தெரிவித்தேன். அதனுடன் மாணிக்கம் ஜெகன், கண்ணா போன்றோர் திட்டமிட்டு பிரஜைகள் குழு வின் செயற்பாடுகளைப் பிளவுபடுத்தி புதிய பிரஜைகள் குழு என்கிற ஒன்றை உருவாக்கியுள்ளனர். இது மக்கள் மத்தியில் குழப்பத்தினை ஏற்படுத்தும் ஒரு விடயம். இவையணைத்தும் ஒரு புஷ்வாணமான விடயம்.
ஒரு மாதத்திற்கு முன்னர் பத்திரிகையாளர் மாநாடொன்றினை வவுனியாவில் நடத்தியிருந்தேன். பிரஜைகள் குழு இரண்டாகப் பிளவு என்கிற செய்தியையும் நான் அறிந்தேன். இவ்விடயம் தொடர்பாக வவுனியா வாடிவீட்டில் ஊடகவி யலாளர் சந்திப்பொன்றினை மேற்கொண்டிருந்தேன்.

அவ்விடத்தில் நான் கூறிய விடயம், பிரஜைகள் குழு என்பது இரண்டாகப் பிளவு படவில்லை. பிரஜைகள் குழுவிற்கு இன்னமும் தலைவர் நான்தான். நான் விலகுவதாகவிருந்தால் தலை வர், செயலாளர், பொருளாளர்களை தெரிவு செய்துவிட்டு விலகிச் செல்வேன். அதுவரை எமது பிரஜைகள் குழு தொடர்ந்தும் பணியாற்றும். அதில் மாற்றமில்லை எனக்குறிப்பிட்டேன். அதற்குப்பின்னர் எமது பிரஜைகள் குழுவிலுள்ள அங்கத்தவர்கள் அனை வரும் ஒரு நிலைப்பாட்டிற்கு வந்து தமது செயற்பாடுகளை எந்தவித தடங்களுமின்றி செயற்படுத்தி வந்தனர்.

SAM_9715 - Copy
புதிதாக தெரிசெய்யப்பட்டிருப்பது தான் இனிமேல் பிரஜைகள் குழுவென அக்கூட்டத்தில் தெரிவித்தனர். புதிதாக பிரஜைகள் குழுவினை தெரிவுசெய்ய மாணிக்கம் ஜெகன் யார்? அவருக்கு என்ன தகுதி இருக்கிறது. அதன் தலைவர் என்கிற வகையில் நான் தான் அதனை தெரிவுசெய்திருக்கவேண்டும். வந்தவர் போனவர் எல்லாம் பிரஜைகள் குழுவின் செயற்பாட்டாளர்கள் எனக்கூறுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது. இவர் களுடைய செயற்பாடுகள் சோற்றுக்காக தங்கள் மானத்தை விற்பவர்கள் என்றே நான் கருதுகின்றேன். நான் தான் அனுமதி வழங்கி புதிய பிரஜைகள் குழு வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்டது என்பது பொய்யான பிரச்சாரம். அதற்கும் எனக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. நான் அவ்வாறு கூறவுமில்லை.

அவ்வாறிருக்கும்போது புதிய பிரஜைகள் குழு உருவாக என்ன காரணம் என தேவராஜாவிடம் வின வியபோது, அன்றைய காலம்போல் இன்றைய காலம் இல்லை. மக்களின் உணர்வுகளை மதித்து அதற்கேற்ப இவர்கள் செயற்படுவது என்பது சந்தேகம். இச்செயற்பாடானானது ஒரு அரசியல் தேவைக்காகவே புதிய பிரஜைகள் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இவர்கள் திட்டமிட்டே பிரஜைகள் குழுவிற்கு எதிரான செயற்பாடுகளை செயற்படுத்தத் துணிந்துள்ளனர். இதில் குறிப்பாக வடக்கு சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் சார்ந்தவர்கள், ரெலோ, புளொட் அமைப்பினைச் சார்ந்தவர்களும் அதி கமாக கலந்துகொண்டிருந்தனர். இதன்போதும் பல கேள்விகள் எழுப்பப்பட்டன. ஏற்கனவே பிரஜைகள் குழு இருக்கும்போது எவ்வாறு புதிய பிரஜைகள் குழுவினை ஆரம்பிப்பது என வினவியபோது, பதில் வழங்கத் தடுமா றிய புதிய குழுவின் ஏற்பாட்டாளர்கள் இது தற்காலிகமானது எனக் கூறி கூட்டத்தைக் கலைத்தனர். இக்கூட்டத்திற்கு பிரஜைகள் குழு வின் தலைவர் தேவராஜா கலந்துகொள்வார் என்பதை எதிர்பார்த்தே பலரும் கலந்து கொண்டனர். இவர்களுடைய நீண்டநாள் விருப்பம் என்னவெனில் பிரஜைகள் குழுவிற்கு வெகுவாரி யாக பணம் கிடைக்கிறது. அவர்கள் பணத்தை துஷ்பிரயோகம் செய்து சொகுசான வாழ்க்கை வாழ்கிறார்கள் என்பதேயாகும்.

அதுமட்டுமன்றி ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியினது சிவசக்தி ஆனந்தனின் தலை மையில் தான் இப்பிரஜைகள் குழு செயற்படுகிறது என்பதும் ஒருசிலரது அபிப்பிராயம். இப்புதிய பிரஜைகள் குழு வினது முகவர்கள் ஒருசிலர் என்னை விலைகொடுத்து வாங்க முயற்சித்தனர். நான் மக்களின் வலி அறிந்து பிரஜைகள் குழுவின் தலை வர் பதவியை ஏற்றுக்கொண்டவன். என்னை யாரும் விலைகொடுத்து வாங்க இயலாது என்கிற செய்தியை அவர்களுக்குக் கூறி அனுப்பினேன். இன்று உள்ளூரிலும், சர்வதேசத்திலும் பிரஜைகள் குழுவிற்கு தனியிடம் இருக்கிறது. 2012இலிருந்து பிரஜைகள் குழு தனித்தே செயற்படுகிறது. கட்சியை பதிவுசெய்வதற்கு பல சிரமங்கள் இருக்கிறது. அதனது அனுமதிபெற பல இடங்கள் ஏறி இறங்கவேண்டிய தேவை இருக்கிறது.

இப்பிரஜைகள் குழுவைப் பதிவுசெய்து நேர்த்தியாக கொண்டுசெல்லவேண்டிய தேவை எம் சார்ந்தவர்களுக்கு இருக்கிறது. கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் புதிதாக கட்சிகளை ஆரம்பிப்பதைப்போன்று மக்கள் நலனுக்காக செயற்படும் பிரஜைகள் குழுவினர் இருக்க, புதிய பிரஜைகள் குழு என்ற ஒன்றினை ஆரம்பிக்க இயலாது. பிரஜைகள் குழுவின் வளர்ச்சிக்கு நாம் முயற்சிக்கவேண்டுமே தவிர, கடந்த 05வருடங்களாக செயற்படும் பிரஜைகள் குழுவினை ஓரங்கட்ட நினைப்பது முட்டாள்தனம்.
இவ்வாறு சிறுபிள்ளைத்தனமாய் தாம் பிரஜைகள் குழு எனக்கூறிக்கொண்டு யுத்தகாலத்திலும், அதன் பின்னரும் சமுதாயத்திற்கு என்ன செய்தார்கள். இப்பிரஜைகள் குழுவுக்குள் முஸ்லீம்களையும் இணைத்திருக்கிறார்கள். சிறந்த விடயம்தான். தமிழனின் கோவணத் தையாவது உறுவிச் செல்லாமல் பாதுகாத்துக்கொள்வது சிறந்தது. மக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். பாரியளவிலான முன்னெடுப்புக்களை இவர்கள் மேற்கொண்டிருந்தாலும் மக்க ளுக்காக செயற்பட்டவர்களை மக்களுக்குத் தெரியும். அரசியல் வாதிகளுக்கும் தெரியும். அமைச்சர் சத்தியலிங்கத்தின் அரவணைப்போடு இப்பிரஜைகள் குழுவினை முன்னின்று செயற்படுத்துவதற்கு அவர் சார்ந்த பலர் இணைக்கப்பட்டிருப்பது என்பது அவர் மக்களுக்காக செய்யும் செயற்பாடுகள் என்ன? என்கிற கேள்வி எழுகின்றது.

Vavuniya1

இத்தருணத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களுக்கு எதிராக தனது செயற்பாடுகளை முடக்கிவிட்டுள்ளாரா? எனவும் சந்தேகங்கள் எழுப்பப் பட்டுள்ளது.
வடக்குக்கிழக்கில் இருக்கக்கூடிய பிரஜைகள் குழுவின் தலைவர்கள் அனைவரும் எம்மோடு இருக்கிறார்கள். அவர்களை வெகுவிரைவில் ஒருங்கி ணைத்துப் போராட்டங்களையும் நாம் நடாத்தவிருக்கின்றோம்.

எமது பிரஜைகள் குழு பற்றி விமர்சிப்பதற்கு அது தொடர்பில் பேசுவதற்கு இவர்கள் தகுதியுடையவர்கள் இல்லை என நான் கூறுகின்றேன். இவ்வாறான செயற்பாடுகளிலிருந்து தமிழ் மக்களாகிய ஒவ்வொருவரும் புரிந்துகொண்டு ஒதுங்கிக்கொள்ள வேண்டும்.

தமிழ் மக்களின் உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் கருத்திற்கொண்டு எமது பிரஜைகள்குழு செயற்பட்டு வருகின்றது. தற்போது புதிதாக உருவாக்கப்பட்ட பிரஜைகள் குழு என்பது இராணுவப் புலனாய் வாளர்கள் மற்றும் அரச உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் எமது பிரஜைகள் குழுவின் செயற்பாடுகளை முடக்குவதற்கு முயற்சிக்கின்றனர்.

இதனை இல்லா தொழிக்க தமிழ் மக்களாகிய நாம் புரிந்துசெயற்படவேண்டும் என்பதே எமது வினயமான வேண்டுகோள்.

– சுழியோடி –

SHARE