ஜனாதிபதி ஆட்சி கவிழ்க்கப்பட்டால் கருணா, கேபியின் நிலை என்ன?

399

LTTE.kp-01

30வருட போராட்ட வரலாற்றில் இலங்கையரசிற்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர்கள் விடுதலைப்புலிகள். அந்த வகையில் 25 வருடங்கள் கருணா, கே.பி இருவரும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் முக்கிய பங்கினை வகித்தவர்கள். ஜெயசிக்குறு கதாநாயகன் என்ற பட்டத்தை தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனால் பெற்றவர்கள். கே.பியினைப் பொறுத்தவரையில் குமரன் பத்மநாதன் என்றவர் சர்வதேச ரீதியாக ஆயுதக்கட்டமைப்புக்களை வளர்த்து தமிழீழ விடுதலைப்புலிகளின் வளர்ச்சிக்கு பாடுபட்ட ஒருவர். இப்போராட்டத்தினை இலங்கை சர்வதேச நாடுகளுடன் இணைந்து மழுங்கடிப்புச் செய்தது. கருணா – பிரபா பிரிவிற்கு ருNP அரசாங்கமே முக்கியமாக வித்திட்டது. அதில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன, ரணசிங்க பிரேமதாஸா, ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் முக்கிய இடம் வகிக்கின்றனர். இவ்விடயம் கருணா அம்மானுக்கும் தெரியும்.

சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க அவர்கள் ரத்வத்த என்பவரை வைத்தே பாரிய யுத்தத்தினை மேற்கொண்டார். ஆனால் அதற்கு தமிழீழ விடுதலைப்புலிகள் பாரிய இழப்புக்களை சந்திரிக்கரசிற்கு ஏற்படுத்தினர். அதன் விளைவாகவே மஹிந்த ராஜபக்ஷவிடம் சந்திரிக்கா ஆட்சியினை ஒப்படைத்தார். அதன் பின்னர் பண்டாரநாயக்கா குடும்பம் மஹிந்தவினால் ஓரங்கட்டப்பட்ட நிலையில் தனது சர்வாதிகார ஆட்சியினை ஆரம்பிக்கத் தொடங்கினார் மஹிந்த. தற்பொழுது இருவருக்கும் இடையில் குடும்ப கௌரவப் பிரச்சினை நிலவிவருகின்றது. இதன் காரணமாகவே மஹிந்த ராஜபக்ஷவினை ஆட்சியில் இருந்து கவிழ்க்க சந்திரிக்கா சூழ்ச்சி செய்கின்றார். அதேநேரம் முஸ்லீம் மக்களின் மீது பாரிய வன்முறைகளை இவ்வரசாங்கம் தோற்றுவித்ததன் காரணமாக அவர்களும் ஆட்சிமாற்றத்தினையே விரும்புகின்றார்கள்.

நானே ராஜா நானே மந்திரி என மஹிந்த அவர்கள் நினைத்ததன் காரணமாகவே இவ்வாட்சிமாற்றத்;திற்கான சந்தர்ப்பமும், சூழ்நிலையும் அமையப்பெற்றுள்ளது. யுத்தத்தினை முடிவிற்குக் கொணர்ந்த விடயத்தில் மஹிந்த அவர்கள் கதாநாயகனாகவே கருதப்பட்டார். ஆனால் இதற்கு முக்கிய காரணமாகவிருந்தவர் சரத்பொன்சேகாவே. நானே இந்த யுத்தத்தினை முடிவிற்குக் கொண்டுவந்தேன் என அவரே பகிரங்கமாகவே குறிப்பிட்டிருந்தார். குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்துகொண்டு கட்டளைகளைப் பிறப்பிக்கலாம். ஆனால் களத்தில் நின்று பார்த்தால் தான் அதனுடைய தார்ப்பரியங்கள் தெரிந்திருக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறிருக்க கருணா, கேபி இருவரும் ருNP அரசிற்கு ஏற்றவர்கள் அல்ல. இருவரைப் பற்றியும் வழக்குகள் அடுக்கடுக்காகக் காத்திருக்கின்றன. ஏதோவொரு வகையில் இருவரும் கூட்டுக்குள்ளோ அல்லது காட்டுக்குள்ளோ செல்லவேண்டிய நிலையேற்படும். இவ்வாறான நிலையில் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கருணாவையும், கேபியையும் மீண்டும் ஒரு யுத்தத்தினை உருவாக்க கட்டளையினைப் பிறப்பிக்கவும் கூடும். விடுதலைப்புலிகளின் எஞ்சியிருப்பவர்கள் பற்றி அரசிற்கு கவலையில்லை. குறிப்பாக கருணா, கேபி இருவரிலுமே அரசு கவனம் செலுத்தியிருக்கிறது. சர்வதேச ரீதியாக பாரிய தாக்குதலினை ஏற்படுத்தும் வலிமை கருணா அம்மானிடம் இருக்கிறது. அதற்கான தளம் அமைப்பது என்பதுதான் கேள்விக்குறி. அதுவும் சாதகமாக அமையுமாகவிருந்தால் நிச்சயமாக இருவரும் அரசினால் பயன்படுத்தப்படுவார்கள்.

ஜனாதிபதித் தேர்தலானது வாழ்வா? சாவா? என்ற நிலையையே மஹிந்தவிற்கு ஏற்படுத்தியுள்ளது. அதேநிலைதான் இவ்விருவருக்கும். ஆகவே முழுமுயற்சியுடன் இத்தேர்தலில் வெற்றிபெற அரசு ஈடுபடும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

SHARE