ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் ரம்புக்கனையில் நாளை நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்திற்கு மக்களை அழைத்துச் செல்வதற்காக இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான 610 பஸ்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

449

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் ரம்புக்கனையில் நாளை நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்திற்கு மக்களை அழைத்துச் செல்வதற்காக இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான 610 பஸ்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

எனினும் இந்த பஸ்களுக்கு செலுத்த வேண்டிய 9 மில்லியன் ரூபா கட்டணம் இதுவரை செலுத்தப்படவில்லை.

சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள 21 பஸ் டிப்போக்களில் மதியம் இரண்டு மணிக்கு இந்த பஸ்களை வழங்க வேண்டும் என மாகாண முகாமையாளர் டிப்போ முகாமையாளர்களுக்கு அறிவித்துள்ளார்.

பஸ்கள் வழங்கப்பட வேண்டிய அரசியல் இணைப்பாளர்களின் பெயர்கள் பஸ்கள் அனுப்பி வைக்கப்பட வேண்டிய இடங்கள் போன்ற விபரங்களும் டிப்போ முகாமையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பஸ்களுக்கு செலுத்தப்பட வேண்டிய கட்டணம் செலுத்துவது தொடர்பில் காணப்படும் தெளிவின்மை காரணமாக பஸ்களை வழங்க சில டிப்போ முகாமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும் பஸ்களுக்கான கட்டணங்களை ஜனாதிபதியின் பொறுப்பின் கீழ் உள்ள வீதி அபிவிருத்தி அதிகாரசபையே செலுத்த வேண்டும் எனவும் இன்னும் பணம் செலுத்தப்படவில்லை என்றாலும் கட்டாயம் பணத்தை செலுத்துவார்கள் எனவும் இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதி முகாமையாளர் (போக்குவரத்து) சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

எனினும் 610 பஸ்களுக்கான கட்டணங்களை செலுத்தப்படுவது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

 

SHARE