ஜிம்பாப்வே அணிக்கு ஏமாற்றம்: முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அசத்தல் வெற்றி

300
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் செய்து 2 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதன் முதல் டி20 போட்டி நேற்று ஹராரேவில் நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. தொடக்கத்தில் திணறிய பாகிஸ்தான் அணி பின்னர் நிதானமாக விளையாடி ஓட்டங்களை சேர்த்தது.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் 8 விக்கெட் இழப்பிற்கு 136 ஓட்டங்கள் எடுத்தது.

ஷேசாத் (17), சோயிப் மாலிக் (35), மொகமது ரிஸ்வான் (33), இமாட் வாசிம் (19) ஆகியோர் சிறப்பாக ஆடினர். ஜிம்பாப்வே பந்து வீச்சாளர் சிபாபா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 137 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் மககட்சா (25) நல்ல தொடக்க கொடுத்தார். சிபாவா டக்-அவுட் ஆனார்.

அணியின் வெற்றிக்காக போராடிய தலைவர் சிகும்புரா 31 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

தொடர் சொதப்பலால் ஜிம்பாப்வே அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 123 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் பாகிஸ்தான் 13 ஓட்டங்களால் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் 1-0 என்று முன்னிலையில் உள்ளது. இரண்டாவது மற்றும் கடைசி டி20 போட்டி 29ம் திகதி நடைபெறுகிறது.

SHARE