ஜெயக்குமாரி விடுதலை செய்யப்பட்டமைக்கு அமெரிக்கா வரவேற்பு

690
மனித உரிமை செயற்பாட்டாளரான பாலேந்திரன் ஜெயக்குமாரி உட்பட எட்டுப் பேரை இலங்கை அரசாங்கம் விடுதலை செய்தமையை வரவேற்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் ஜென் சகி இதனை தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கடந்த ஒரு வருட காலமாக குற்றச்சாட்டுக்கள் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருந்த பாலேந்திரன் ஜெயக்குமாரியை கடந்த 10ம் திகதி அரசாங்கம் பிணையில் விடுதலை செய்தது.

தமிழ் சிறுபான்மையினரை நோக்கி புதிய அரசாங்கத்தின் நல்லலெண்ண நடவடிக்கையாக இது உள்ளது.

அத்துடன். இலங்கையில் மனித உரிமையை நிலைநாட்டுவதை நோக்கிய சாதகமான நடவடிக்கை எனவும் ஜென் சகி தெரிவித்தார்.

SHARE