ஜெயலலிதா விடுவிக்கப்பட்டது ஏன்?: நீதிபதி குமாரசாமி தீர்ப்பில் விளக்கம்

335

 

தமிழக முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா உள்ளிட்ட நான்கு பேருக்கும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அளித்த தண்டனையை ரத்து செய்து  கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு  வழங்கியது. ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரும் விடுதலை செய்யப்பட்டது ஏன்? என்பது குறித்து தனது தீர்ப்பில் நீதிபதி குமாரசாமி தெரிவித்துள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:
201505111849378053_Jaya-DA-case-trial-court-order-not-sustainable-in-law-HC_SECVPF
இந்த வழக்கில் ஆதாரங்களை ஆய்வு செய்யும்போது பெங்களூரு தனிக்கோர்ட்டு ஒரு தவறான முடிவுக்கு வந்துள்ளது தெளிவாக தெரிகிறது. இதில் சட்ட தடைகள் இல்லாதது மட்டுமல்ல, நீதியின் நலன் கருதி குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டியது அவசியமாகிறது. இந்த வழக்கில் வருமான வரி விவகாரங்களை ஒரு குறைந்தபட்ச மதிப்பாக கூட எடுத்துக்கொள்ள தனிக்கோர்ட்டு மறுத்துவிட்டது. குற்றவாளிகள் தரப்பு ஆவணங்களை கீழ்கோர்ட்டு சரியான முறையில் கவனத்தில் கொள்ளவில்லை.
கீழ்கோர்ட்டு தனது தீர்ப்பில் குற்றவாளிகள் இந்தியன் வங்கியில் கடன் வாங்கினார்கள் என்று குறிப்பிட்டு இருந்தாலும், அதை அவர்களின் வருமானமாக கருதவில்லை. அதனால் கடனை வருமானமாக கருதாமல் கீழ்கோர்ட்டு தவறு செய்துள்ளது. கீழ்கோர்ட்டு சுதாகரன் திருமண செலவை ரூ.3 கோடி என்று மதிப்பிட்டுள்ளது. இந்த தொகையை ஜெயலலிதா செய்ததாக எந்த ஆதாரமும் இல்லாமல் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகை முழுவதும் ஜெயலலிதா மீது சுமத்தியது தவறு.ஒட்டுமொத்த விஷயங்களையும், ஆவணங்களையும் கவனத்தில் கொள்ளும்போது, கீழ் கோர்ட்டின் தீர்ப்பும், அதற்கு சொல்லியுள்ள ஆதாரமும் பலம் குறைந்து காணப்படுகிறது என்பது எனது கருத்து. சட்டத்தில் கீழ்கோர்ட்டு கூறிய ஆதாரங்கள் வலிமையாக இல்லை.இவ்வாறு தீர்ப்பில் குமாரசாமி கூறி உள்ளார்.

 

SHARE