ஜேர்மனியின் புகழை கெடுக்க வேண்டாம்’: அகதிகள் எதிர்ப்பாளர்களுக்கு அதிபர் ஏஞ்சலா மெர்கல் கடும் கண்டனம்

324
ஜேர்மனியில் குடியேற விரும்பும் புலம்பெயர்ந்தவர்கள் மீது தாக்குதல்களை நடத்தி சர்வதேச அளவில் நாட்டின் புகழை கெடுக்க வேண்டாம் என அகதிகள் எதிர்ப்பாளர்களுக்கு அந்நாட்டின் அதிபர் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்தவர்களை குடியமர்த்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று ஜேர்மனி தலைநகரான பெர்லினில் நடைபெற்றது.பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டேவுடன் நடைப்பெற்ற இந்த கூட்டத்தில் பேசிய ஜேர்மனியின் அதிபரான ஏஞ்சலா மெர்கல் அகதிகள் எதிர்ப்பாளர்களுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் சாக்சன் நகரில் அகதிகள் முகாம் மீது வலதுசாரி போராட்டக்காரர்கள் கட்டவிழ்த்த தாக்குதல்கள் தன்னை வேதனை அடைய செய்வதாக கூறியுள்ளார்.

போராட்டக்காரர்களுடன் இணைந்து ஜேர்மனி பெண்கள் மற்றும் குழந்தைகளும் தாக்குதல்களை நடத்தியுள்ளது நாட்டிற்கு பெரும் தலை குணிவை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனி நாடு எந்த சூழ்நிலையிலும் தனி நபரின் சுயமரியாதையை கெடுக்கும் நடவடிக்கையில் ஈடுப்படுவதில்லை. இந்நாட்டில் குடியேற அனுமதி கோருவதற்கு ஒவ்வொரு நபருக்கும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

ஆனால், கடந்த சில நாட்களாக புலம்பெயர்ந்தவர்கள் மீதான தாக்குதல்கள் ஜேர்மனியின் புகழிற்கு அவமதிப்பு ஏற்படுத்தும் விதமாக உள்ளது என ஏஞ்சலா மெர்கல் கவலை தெரிவித்துள்ளார்.

ஜேர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் குடியேற விண்ணப்பம் செய்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், இந்த சூழ்நிலையை எதிர்க்கொள்ள தேவையான நடவடிக்கைகளை ஐரோப்பிய தலைவர்கள் எடுத்து வருகிறார்கள்.

எனவே, ஜேர்மனியில் குடியேறியுள்ள மற்றும் குடியேற்றத்திற்காக காத்துக்கொண்டுள்ள புலம்பெயர்ந்தவர்கள் மீது இனி ஒருபோதும் தாக்குதல்களை நடத்தக்கூடாது என்றும், அவ்வாறு தாக்குதல்களை நடத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிபர் ஏஞ்சலா மெர்கல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அகதிகள் முகாம் திறப்பதற்கு கடும் எதிர்ப்பு: பொலிசாரை சரமாரியாக தாக்கிய போராட்டக்காரர்கள்

SHARE