டுவிட்டர் கணக்கில் ஆபாச படம்! அதிர்ச்சியில் சங்கக்காரா

287

இலங்கை அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்காராவின் டுவிட்டர் கணக்கு ‘ஹேக்’ செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற சங்கக்காரா, தற்போது இங்கிலாந்தில் நடக்கும் கவுண்டிப் போட்டியில் சர்ரே அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்நிலையில் இவரது டுவிட்டர் கணக்கு ‘ஹேக்’ செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது அதில் ஆபாச படமும் பதிவேற்றப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சங்கக்காரா, ரசிகர்களிடம் மன்னிப்பு கோரினார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், “எனது டுவிட்டர் கணக்கு ‘ஹேக்’ செய்யப்பட்டுள்ளது. என்னால் நம்ப முடியவில்லை.

இதற்கு முன் வந்த பதிவுகளை அழித்து விடுங்கள். இதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எனது டுவிட்டர் கணக்கை புதுப்பிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

SHARE