டெய்லர் அதிரடி சதம்: அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது இங்கிலாந்து

342
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், டெய்லரின் அதிரடி சதத்தால் 93 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.இங்கிலாந்து– அவுஸ்திரேலியா அணிகள் மோதிய 3–வது ஒருநாள் போட்டி மான்செஸ்டரில் நேற்று பகல்–இரவாக நடந்தது.

முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 300 ஓட்டங்கள் குவித்தது, சிறப்பாக விளையாடிய டெய்லர் சதம் அடித்தார்.

இதற்கு பின் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியில் ஆரோன் பஞ்ச் அதிகபட்சமாக 53 ஓட்டங்களும், மேத்யூ ஹடே 48 ஓட்டங்களும் எடுத்தனர்.

முடிவில் 44 ஓவர்களில் 207 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 93 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்றுப் போனது.

ஐந்து போட்டிகளில் கொண்ட தொடரில் இங்கிலாந்து ஒரு போட்டியிலும், அவுஸ்திரேலியா இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE