டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் சோயிப் மாலிக்

307

பாகிஸ்தான் அணியின் சகலதுறை வீரரான சோயிப் மாலிக் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த 2010ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடினார். அதன்பிறகு அவருக்கு பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கவில்லை.

இந்நிலையில் அசார் அலிக்கு காயம் ஏற்பட்டதால் சுமார் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இங்கிலாந்து தொடரில் இடம்பிடித்தார்.

அபுதாபியில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இரட்டை சதம் (245 ஓட்டங்கள்) அடித்து அசத்தினார். ஆனால் அதன்பின் 0, 2, 7, 0 ஓட்டங்கள் என அடுத்தடுத்து சொதப்பினார்.

தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக 3வது டெஸ்ட் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இதில் 2வது இன்னிங்சில் ஆண்டர்சனின் முதல் பந்திலே ஆட்டமிழந்த மாலிக் டக் -அவுட் ஆக வெளியேறினார்.

இந்நிலையில் அவர் சர்வதேச டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ’ஓய்வு பெற இதுவே சரியான நேரம்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2001ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமான மாலிக், 34 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1860 ஓட்டங்களும், 25 விக்கெட்டும் கைப்பற்றியுள்ளார்.

SHARE