டோனியின் நிறுவனத்தில் இருந்து திடீரென விலகிய சுரேஷ் ரெய்னா

332
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான சுரேஷ் ரெய்னா ரித்திஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் இருந்து திடீரென விலகியுள்ளார்.ரித்திஸ்போர்ட்ஸ் நிறுவனத்தை இந்திய அணித்தலைவர் டோனியின் நண்பர் நடத்தி வருகிறார். மேலும், இதில் பெரும்பாலான பங்குகள் டோனியிடம் இருப்பதாக கூறப்படுகிறது.சுரேஷ் ரெய்னாவின் விளம்பரம் தொடர்பான அனைத்தையும் இந்த நிறுவனம் தான் கவனித்து வந்தது.இந்த நிலையில் ரித்திஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் இருந்து திடீரென விலகிய ரெய்னா, தற்போது ஐ.ஒ.எஸ். ஸ்போர்ட்ஸ் மற்றும் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தமாகியுள்ளார்.

அந்த நிறுவனம் ரெய்னாவை 3 ஆண்டுக்கு ரூ.35 கோடிக்கு ஒப்பந்தம் செய்து உள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட்டு உள்ளார்.

அந்த நிறுவனம் விஜேந்தர்சிங், மேரிகோம், சுசில்குமார், சாய்னா நேஹ்வால் போன்ற விளையாட்டு பிரபலங்களின் விளம்பரங்களை கவனித்து வருகிறது.

ஆனால் ஐ.ஒ.எஸ். நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள முதல் கிரிக்கெட் வீரர் ரெய்னா ஆவார்.

டோனியின் கம்பெனியில் இருந்து ரெய்னா விலகியதற்கான காரணம் தெரியவில்லை.

ஐபிஎல் போட்டியில் சென்னை அணியின் எதிர்காலம் கேள்வி குறியாக உள்ளது. மேலும், டோனி இன்னும் சில ஆண்டுகள் மட்டுமே விளையாடுவார்.

இதனால் வியாபார நோக்குடன் ரெய்னா இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

SHARE