டோனி களமிறங்குவாரா ஐக்கிய அரபு எமிரேட்சுடன் மோதல்…

387
 

துடுப்பாட்ட பயிற்சியின் போது இந்திய அணித்தலைவர் டோனிக்கு காயம் ஏற்பட்டதால் அவர் இன்றைய போட்டியில் களமிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

உலகக்கிண்ண லீக் தொடரில் இந்திய அணி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை இன்று எதிர்கொள்கிறது. இதற்காக இந்திய அணி வீரர்கள் பெர்த் மைதானத்தில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர்.

துடுப்பாட்ட பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய அணித்தலைவர் டோனிக்கு முழங்கையில் ஒரு பந்து பலமாக தாக்கியது. இதையடுத்து வலியை போக்க முழங்கையில் ”ஐஸ் பேக்” வைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்றைய போட்டியில் டோனி ஆடுவாரா என்று சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும் டோனி நலமாக இருப்பதாகவும், அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை எனவும் இந்திய அணியின் மேலாளர் டாக்டர் ஆர். என். பாபா தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், நேற்று முன் தினம் இதே காயம் தான் முகம்மது சமிக்கு ஏற்பட்டது. எனவே டோனி களம் இறங்கும் வரை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

SHARE