டோனி தவறவிட்டால் என்ன.. அசத்தலாக பிடியெடுத்து உலகசாதனை படைத்த டிராவிட்

342

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான டிராவிட் துடுப்பாட்டத்தில் மட்டுமல்ல, களத்தடுப்பிலும் கலக்கியவர்.

இவர் பொதுவாக ஸ்லிப்பில் களத்தடுப்பில் ஈடுபடுவார். விக்கெட் கீப்பரை ஏமாற்றி வரும் பந்து கூட இவரது பிடியில் இருந்து தப்ப முடியாது. அந்த வகையில் பந்தின் வருகைக்காக ஆவலுடன் காத்திருப்பார்.

அந்த வகையில் டர்பனில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 200 பிடியெடுப்புகள் எடுத்த முதல் வீரர் என்ற உலக சாதனை படைத்தார்.

அந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 103 ஓட்டங்களுக்கு 6 விக்கெட் இழந்து தவித்த நிலையில், ஹர்பஜன் ஸ்டெய்னுக்கு பந்துவீசினார்.

அவரது பேட்டின் விளிம்பில் பட்ட பந்து விக்கெட் கீப்பராக இருந்த டோனியை கடந்து சென்றது. அப்போது ஸ்லிப்பில் களத்தடுப்பில் இருந்த டிராவிட் தனது இடது கையால் அந்த பந்தை ஸ்டைவ் அடித்து பிடித்து அசத்தினார்.

இந்த பிடியெடுப்பு தான் டெஸ்ட் அரங்கில் டிராவிட்டின் 200வது பிடியெடுப்பாக அமைந்தது. தற்போது வரை அவரது சாதனையை யாராலும் முறியடிக்க முடியவில்லை.

301 டெஸ்ட் இன்னிங்சிஸ்களில் விளையாடியுள்ள டிராவிட் 210 பிடியெடுப்புகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். ஜெயவர்த்தனே (205), காலிஸ் (200), பொண்டிங் (196), ஸ்டீவ் வாக் (181) அடுத்தடுத்த இடங்களில் இருகின்றனர்.

SHARE