டோனி தான் ‘டாப்’: விளம்பரங்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.140 கோடி

315
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவரான டோனி விளம்பரங்கள் மூலம் அதிகம் சம்பாதிக்கும் வீரர்களில் முதலிடத்தில் இருக்கிறார்.டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற டோனி, தற்போது ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் தலைவராக செயல்பட்டு வருகிறார். இவர் விளம்பரம் மூலம் ஆண்டுக்கு ரூ.130 கோடி முதல் ரூ.140 கோடி வரை சம்பாதிக்கிறார்.பெப்சி, ரீபெக், பூஸ்ட் உள்பட 15 விளம்பர நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் அவரது கைவசம் உள்ளது. ரித்தி ஸ்போர்ட்ஸ் நிறுவனம் அவரது விளம்பரங்களை கவனித்து வருகிறது. இதை அவரது நண்பர் நடத்தி வருகிறார்.

இவருக்கு அடுத்தபடியாக டெஸ்ட் அணியின் தலைவரான விராட் கோஹ்லி விளம்பரம் மூலம் ஆண்டுக்கு ரூ.60 கோடி முதல் ரூ.70 கோடி சம்பாதிக்கிறார். டி.வி.எஸ்., அடிடாஸ், பூஸ்ட், எம்.ஆர்.எப். உள்பட 13 நிறுவனங்கள் அவர் கைவசம் இருக்கிறது.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான தவான் ரூ.6 கோடி முதல் ரூ.7 கோடி வரை விளம்பரங்கள் மூலம் சம்பாதிக்கிறார்.

முன்னணி வீரர்களான ரோஹித் சர்மா ரூ.4 கோடி முதல் 5 கோடி வரையிலும், ரெய்னா, அஸ்வின் ரூ.2 கோடி முதல் 3 கோடி வரையிலும், ரஹானே ரூ.2 கோடியும் விளம்பரம் மூலம் சம்பாதிக்கிறார்கள்.

SHARE