தனக்கு சிறைச்சாலையில் வழங்கும் உணவினை உண்ண முடியாது துமிந்த சில்வா

268

 

கொலை குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு மரண தண்டணை விதிக்கப்பட்டு, வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.

duminda-mr_ci %e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%a3

இந்நிலையில் துமிந்த சில்வாவை போகம்பர சிறைச்சாலைக்கு மாற்றுவது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை பின்னர் அதிகாரிகள் மாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துமிந்த சில்வா மற்றும் தெமட்டகொட சமிந்த ஆகிய இருவரையும் போகம்பர சிறைச்சாலைக்கு மாற்றி அனுப்புவதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் தீர்மானித்திருந்தனர்.

இருந்து போதிலும் சில காரணங்களுக்கமைய துமிந்த சில்வாவின் இடமாற்றத்தை ரத்து செய்துள்ளனர்.

எப்படியிருப்பினும் இந்த கொலை சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள துமிந்த சில்வா உட்பட குழுவினரை, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஏனையோரிடமிருந்து ஒதுக்கி வைப்பதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

அதற்கமையவே அவர் பீ – 3 அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தெமட்டகொட சமிந்த என்ற மரண தண்டனை கைதி, போகம்பர சிறைச்சாலைக்கு மாற்றி அனுப்பியுள்ளதாகவும், துமிந்த சில்வா உட்பட ஏனையோரை வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைத்துள்ளதாகவும் சிறைச்சாலை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை துமிந்த சில்வாவை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் கட்டணம் செலுத்தப்படும் வார்ட்டில் அனுமதிக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருதாக முன்னர் செய்திகள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர கொலை வழக்கின்குற்றவாளியென நிரூபிக்கப்பட்டு நீதிமன்றில் மரணதண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, வெலிக்கடை சிறைச்சாலைதிணைக்கள அதிகாரிகளிடம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

தனக்கு சிறைச்சாலையில் வழங்கும் உணவினை உண்ண முடியாது என்றும், தனக்குவீட்டிலிருந்து கொண்டு வரும் உணவை உண்பதற்கு அனுமதியளிக்குமாறு கோரியிருந்தார்.

எனினும் இவரது கோரிக்கையை சிறைச்சாலைகள் திணைக்களம் மறுத்துள்ளது.

எந்தவொரு மரணதண்டனைக் கைதிக்கும் வீட்டு உணவினை உண்பதற்கு அனுமதியில்லைஎன்றும் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE