தனியார் ஆயுதக்களஞ்சியங்களுக்கு கோத்தபாயவே அனுமதி வழங்கினார்!

382

 

இலங்கையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு தனியார் ஆயுதக் களஞ்சியங்களுக்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவே அனுமதி வழங்கியதாக தெரியவந்துள்ளது.

குற்றப்புலனாய்வுத் துறையினர் இரண்டு நாட்களுக்கு முன்னர் கோத்தபாய ராஜபக்சவிடம் பெற்றுக்கொண்ட வாக்குமூலத்தின் போது அவர் இதனை ஏற்றுக்கொண்டுள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கைப்பற்றப்பட்ட ரக்னா லங்கா ஆயுதக் களஞ்சியமும், காலி துறைமுகத்தில் கைப்பற்றப்பட்ட எவான்ட்காட் ஆயுதக் களஞ்சியமுமே இவையாகும்.

இந்த விடயம் தொடர்பில் மூன்று பேரைக் கொண்ட குற்றப்புலனாய்வு அதிகாரிகள், கோத்தபாயவை விசாரணை செய்தனர்.

SHARE