தமது மகனுக்கு பொதுமன்னிப்பு வழங்கத் தவறியமை பற்றி மனவருத்தத்தை வெளிப்படுத்தியுள்ள ராஜி சுகுமாரன், தம்மை நேருக்கு நேர் சந்திக்கக்கூடிய தைரியம் ஜனாதிபதிக்கு இருக்கவில்லை

379

 

இந்தோனேஷிய ஜனாதிபதிக்கு மயூரனின் தாயாரின் கடிதம்

மயூரன் சுகுமாரனின் தாய் இந்தோனேஷிய ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

Widodo23ECD76D00000578-2869230-image-a-27_1418274501838 bali1

தமது மகனுக்கு பொதுமன்னிப்பு வழங்கத் தவறியமை பற்றி மனவருத்தத்தை வெளிப்படுத்தியுள்ள ராஜி சுகுமாரன், தம்மை நேருக்கு நேர் சந்திக்கக்கூடிய தைரியம் ஜனாதிபதிக்கு இருக்கவில்லையெனக் கூறியிருக்கிறார்.
rajiஹெரொயின் போதைப்பொருளை கடத்த முற்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மயூரன் சுகுமாரனுக்கும், அன்ட்ரூ சானுக்கும் பத்து வருடங்களுக்கு முன்னர் இந்தோனேஷியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட தீவிர போராட்டங்களைத் தொடர்ந்து, இவர்கள் இருவருக்கும் கடந்த வாரம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இருவரும் நுசக்கம்பங்கன் தீவில் இந்தோனேஷிய துப்பாக்கிக் குழுவின் வேட்டுக்களை நெஞ்சில் தாண்டி உயிரிழந்தார்கள்.

இது பற்றி மயூரனின் தாய் எழுதிய கடிதத்தில் பல உணர்வுபூர்வமான வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

‘என் மகனையும், இன்னும் எழுவரையும் கொல்லுமாறு நீங்கள் உத்தரவிட்ட மனிதர்கள் துப்பாக்கி விசையை இழுத்த சமயம் நீங்கள் எங்கிருந்தீர்கள் என்பதை அறியேன், நீங்கள் தொலைதூரத்தில் இருந்திருக்கலாம். ஆனால், தம்மை நேசிப்பவர்கள் அனைவரும் அருகிலுள்ள ஹோட்டலில் தமது மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட செய்தியை கேட்பதற்காக காத்திருப்பார்கள் என்பதை அறிந்து கொண்டே தமது மகன் மரணத்தைத் தழுவினார்’ என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமது மகன் தீவிரமான குற்றத்தைப் புரி;ந்தபோதிலும், அதற்காக இந்தோனேஷிய மக்களிடம் பல தடவைகள் மன்னிப்புக் கோரியிருந்ததாக ராஜி அம்மையார் குறிப்பிட்டுள்ளார். மயூரன் சக கைதிகளைத் திருத்திய விதம் பற்றியும் அவர் கடிதத்தில் பேசியிருக்கிறார். தாம் புனர்வாழ்வு பெற்றதால் தாம் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது மயூரனின் கோரிக்கையாக இருக்கவில்லை. மாறாக, தம்மை கொன்று விட வேண்டாம் என்றே அவர் கோரினார் என்று தாயார் சுட்டிக்காட்டியுள்ளார்

இந்தோனேஷியாவில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் மற்றவர்களுக்கோ, அவர்களின் குடும்பத்தவர்களுக்கு ஏதோவொரு வகையில் உதவி செய்ய வேண்டும் என்ற நம்பிக்கையுடன் தாம் கடிதம் எழுதுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

SHARE