தமிழ் மக்களின் அரசியலிற்கு முட்டுக்கட்டையாக முஸ்லீம் அரசியல்வாதிகளின் செயற்பாடு

380

 

கடந்த பல வருடங்களாக தமிழ்பேசும் மக்கள் எனக் கூறிக்கொள்ளும் முஸ்லீம் அரசியல்வாதிகள் மஹிந்த அரசுடன் இணைந்து செயற்பட்டதன் விளைவாக அவர்களின் மதச்சுதந்திரத்தினையும், பள்ளிவாசல்களையும் இழக்கநேரிட்டது. நீதி அமைச்சர் என்ற வகையில் நீதியினை நிலைநாட்ட வலிமை இல்லாதவராக காணப்படுவதுடன், முஸ்லீம் காங்கிரசினை சீரான பாதையில் வழிநடத்த முடியாத நிலை என பலவற்றை சந்தித்தும் உணராதிருப்பது வருந்தத்தக்கது. ஜனாதிபதித் தேர்தல் சூடுபிடித்துள்ளதால் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினருடன் இணைந்து தீர்வுகளை எடுப்பதன் ஊடாக சிறுபான்மை இனத்திற்கான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியும். இல்லையேல் முஸ்லீம் மக்கள் வழிபடுவதற்கு வழிபாட்டுத் தலங்கள் கூட இல்லாத நிலை ஏற்படும். ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு சிந்தித்துச் செயற்படுவது முஸ்லீம் அரசியலுக்கும், அரசியல்வாதிகளுக்கும் சிறந்ததாக அமையும்.

Hakeem_Prabha

SHARE