தரையை தொட முடியாமல் தள்ளாடிய விமானம்

286
பிரித்தானியாவில் இமோஜின் புயல் தாக்கத்தால் மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கையை இழந்து தவிப்பதோடு மட்டுமல்லாமல் விமானபோக்குவரத்தும் அவ்வப்போது தடைபட்டு வருகிறது.இத்தாலியின் மிலன் நகரில் இருந்து புறப்பட்ட, Alitalia aircraft என்ற பயணிகள் விமானம், London நகர விமான நிலையத்திற்கு தரையிரங்க வந்துள்ளது.

ஆனால், இமோஜின் புயலின் பாதிப்பு இருந்ததன் காரணமாக காற்று பயங்கரமாக வீசியது.

இருப்பினும் விமானத்தை பத்திரமாக தரையிரக்கிவிடலாம் என்று விமானி முயற்சிக்கையில், அதிக காற்று வீசியதன் காரணமாக விமானம், அங்கும் இங்கும் தள்ளாடியது.

இதனால், விமானம் தரையை தொடுவது போன்று வந்துவிட்டு, மீண்டும் விண்ணில் பறந்துசென்றுவிட்டது.

பிரித்தானியாவில் உள்ள பல பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட வெள்ள அபாயமும் 180க்கும் மேற்பட்ட எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது, பெரும்பாலான பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

SHARE