தலைவர் பிரபாகரனின் பிறந்ததினத்தை முன்னிட்டு தேசிய தலைவா் பிறந்த மண்ணில் மரநடுகை

437

வடமாகாணசபையின் விவசாய அமைச்சர் உள்ளிட்ட வடமாகாணசபை உறுப்பினர்களால் தமிழீழ தேசியத் தலைவாின் பிறந்த தினமான இன்று 26.11.2014 புதன்கிழமை மாலை 03மணியளவில் வல்வெட்டித்துறையில் மரநடுகை நிகழ்வும் மரக்கன்று வழங்கும் நிகழ்வும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வடமாகாணசபையின் விவசாய கமநலசேவைகள் கால்நடை அபிவிருத்தி நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சினால் நவம்பர் மாதம் மரநடுகை மாதமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஆரம்பநிகழ்வு கடந்த நவம்பர் 01 ஆம் திகதியன்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனால் ஊர்காவற்றுறை நாரந்தனை பகுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டு தொடர்ந்து பலராலும் பல இடங்களில் முன்னெடுக்கப்பட்டு வந்தது. இந்நிகழ்வின் தொடர்ச்சியாக இன்று 26.11.2014 வல்வெட்டித்துறை கழுகுகள் விளையாட்டுக்கழகத்தின் நெற்கொழு மைதானத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வடமாகாணசபையின் விவசாய கமநலசேவைகள் கால்நடை அபிவிருத்தி நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வடமாகாணசபை உறுப்பினர்களான திருமதி .அனந்தி சசிதரன் பா.கஜதீபன் ச.சுகிர்தன் வல்வெட்டித்துறை நகரசபையின் உபதலைவர் க.சதீஸ். பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் இ.சிவசுப்பிரமணியம் ஆகியோர் கலந்துகொண்டு மரநடுகையில் ஈடுபட்டனர். அத்துடன் வல்வெட்டித்துறை சந்தைப்பகுதிக்குச்சென்ற அமைச்சர் தலைமையிலான மாகாணசபை உறுப்பினர்கள் குழுவினர் பிரதேச மக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி வைத்தனர். மக்களும் ஆர்வத்துடன் மரக்கன்றுகளைப்பெற்றுச்சென்றனர்.

unnamed (29)

unnamed (30)

unnamed (31)

unnamed (32)

unnamed (33)

unnamed (34)

unnamed (35)

SHARE