தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தாயகத்திலும் தமிழகத்திலும் வெடி கொளுத்தி, கேக் வெட்டிப் பெரும் எடுப்பில் கொண்டாடப்பட்டுள்ளது

498

தாயகத்தில் சிங்களப்படைகளின் ஆக்கிரமிப்புக்கலையும் மீறி தமிழீழ  தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின்  59 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் நேற்று  இடம்பெற்றது.

கூடவே புலம்பெயர் தேசங்களிலும், தமிழகத்திலும்  வெகு எழுச்சியாக கொண்டாடப்பட்டன.

தாயகத்திலும் தமிழகத்திலும் வெடி கொளுத்தி, கேக் வெட்டிப் பெரும் எடுப்பில் கொண்டாடப்பட்டுள்ளது.   தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 26ஆம் திகதி கொண்டாடப்படுவது வழமை.

இம்முறையும் அது வடக்கு கிழக்கில்  கொண்டாடப்படலாம் என்ற அச்சம் காரணமாக படையினரின் ரோந்து நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டிருந்தது . இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொலிஸாரின் தடையை மீறி தலைவர் பிரபாகரன் அவர்களின்  பிறந்தநாள் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு “கேக்’ வெட்டி மாணவர்கள் பிறந்த நாளை கொண்டாடினர். சுமார் 500 மாணவர்கள் வரை இதில் பங்கெடுத்திருந்தனர்.

 இதேவேளை, யாழ். மாவட்டத்தின் சில பகுதிகளில் நேற்று நள்ளிரவு பட்டாசு வெடிகள் கொளுத்தப்பட்டன. இருப்பினும் யாரால் இந்த வெடிகள் கொளுத்தப்பட்டன என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.

தமிழ் மக்கள் வாழும் நாடுகளான அமெரிக்கா, கனடா,பிரான்ஸ்,ஜேர்மனி,இத்தாலி, நோர்வே,டென்மார்க்,சுவீடன்,சுவிஸ்,பிரித்தானியா,ஹொலண்ட்,அவுஸ்ரேலியா, நியூசிலாந்து,தென் ஆபிரிக்கா, பொட்சுவானா, மத்திய கிழக்கு நாடுகளான டோகார்,கட்டார் உட்பட 20 இற்கும் மேற்பட்ட நாடுகளில் தேசியத்தலைவருக்கு பிறந்த நாள் நிகழ்வுகளும், வாழ்த்துக்களும், விசேட பூஜைகளும் இடம்பெற்றன.

இலங்கை, இந்தியா தவிர மற்றைய நாடுகளில் தேசியத்தலைவரின் பிறந்த நாள் கொண்டாட வேறு  தடை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அண்ணா இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள். எங்கிருந்தாலும் எங்களின் இதயம் உங்களுக்காகத் துடிக்கும் எங்களின் வாழ்த்து மழைத்துளியாகி உங்களை வந்து நனைக்கும் இது தாயின் உயிர் மீது செய்கிற சத்தியம் தமிழீழம் உன்னாலே காண்பது நிச்சயம்.59 வது அகவையில் எமது தமிழீழத் தேசியத் தலைவர்

அன்பிற்கு அன்பும்
அறத்திற்கு அறமும்
நெஞ்சத்தில் உரமும்
கொண்ட எம் தலைவா !!
சோழர்குலத்தில் தோன்றிய
விடிவெள்ளியே !!
எம் தமிழினத்தின் மைந்தனே
எம் கரிகாலனே !!
எம் இனத்திற்கு – உன்
கண்முன்னே அநீதி நடப்பது கண்டு
துடித்த உன் நெஞ்சு
புயலாகப் புறப்பட்டது
நீதியின் வழிதேடி !!
எம் இனத்திற்கு ஓர் இழிவு
அது என் தாய்க்கான இழிவு
இனியும் பொறுமை காக்க முடியாது
அமைதியாகக் கிடந்தால்
அடிமையாகவே இருந்திடுவோம்
என்று அஞ்சா நெஞ்சுடன்
புத்தகம் சுமக்கும் உந்தன் கையில்
ஆயுதம் துமந்தாய் தலைவா !!
வாடி நின்ற எம் இனத்திற்கு
மழையாக வந்து காத்தாய் !!
அலறிக் கொண்டிருந்த மக்கள்
நிம்மதி பெருமூச்சு விட்டார்கள் !!
எம் இனம்
எம் மொழி -எதுவென
உலகிற்கு உணர்த்தினாய் தலைவா !!
நான் யார் ?
எம் இனம் எப்படிப்பட்டது -உன்னால்
உலகமே எம்மைத் திரும்பிப் பார்த்தது தலைவா !!
திரும்பிப் பார்த்தவர்கள்
பயந்து நடுங்கும் படி
படைகள் கொண்டு
பாரில் எமக்கு ஒரு
பாதையை வகுத்துக் கொண்டாய் !!
கலங்கித்தான் போனார்கள்
உன்னை ( எம்மை ) வளரவிட்டால் …
எம் நிலை என்ன என குழம்பி விட்டார்கள்
சதி செய்து
குழி பறித்தார்கள் !!
காயங்களைக் கண்களில் தரவில்லை
இதயத்தில் தந்துவிட்டார்கள்.
காயமும் ஆறவில்லை
தளம்பும் மறையவில்லை.
எம் விடுதலை உணர்வை
குறைத்து மதிப்பிட்டு விட்டனர்
விழுந்தாலும் எழுவோம்
மீண்டும் மீண்டும் பெருவிருச்சமாக !!
இந்நாள் தலைவா – உந்தன்
பிறந்ததின நன்நாள் – உந்தன்
கனவெல்லாம் நனவாகும்
நன் நாளும் வெகுதூரமில்லை !!
நீ காட்டிய பாதையில் நாம் செல்கிறோம்
நாம் இனியும் செல்வோம்
இது உன்மேல் உறுதி தலைவா !!
இது உன்மேல் உறுதி தலைவா !!

கவிதை சகோதரி சுகி விது ஜெர்மனி

SHARE