ஸ்ரீ லங்கா டெலிகொம், தனது பைபர் ஒப்டிக் இணைப்பின் மூலம் (Fiber Optic) நாடு முழுவதும் நவீன தொழில்நுட்பப சேவையினை மக்களுக்கு வழங்கிவருகின்றது. மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் இவ்வாறான இணைப்பு இழைகள் கடந்த மழைகாலத்தில் இடம்பெற்ற வெள்ளத்தால் மண்டைக்கல்லாறு பகுதியில் ஏ 32 பிரதான சாலையில் பாரிய மரம் சரிந்ததால் பாதிக்கப்பட்டிருந்தது, நீண்ட நாட்கள் சீர்செய்யப் படாமல் இருந்த குறித்த வேலை தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டியதன் பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக விரைந்து செயற்ப்பட்டு அந்த பகுதியை சீர்செய்துள்ளனர், இதுபோல வெள்ளம் வருமுன்னர் அணையைக்கட்டவேண்டும் என்னும் பழமொழிக்கு ஒப்பாக சிறு சிறு தவறுகள் ஆரம்பத்திலேயே சீர்செய்யப் படுமானால் பொதுச் சொத்துக்களை நாம் மிகவும் பயனுள்ள வகையில் நீண்ட காலம் உபயோகிக்க உதவியாக இருக்கும் அத்தோடு அரச சொத்துக்களும் பாதுகாக்கப்படும், எனவே இவ்வாறு சுட்டிக்காட்டிய வேளையிலே விரைந்து செயற்ப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்களையும் எனது மனப்பூர்வமாக பாராட்டி வாழ்த்துகின்றேன்.
இதே போன்று ஏ 32 பிரதான சாலையின் இந்த இணைப்புக்கள் பல இடங்களிலும் பராமரிப்பின்றி காணப்படுகின்றது குறிப்பிடத்தக்கது, உதாரணமாக இதே போன்று கேரதீவு பகுதியில் 13 ஆவது மயில் கல் அருகில் இரண்டு கம்பங்கள் முறிந்து இணைப்பானது நிலத்தோடு செல்வதைக் காண முடிகின்றது. எனவே இதனையும் விரைவாக சீர்செய்யுமாறும் சம்மபந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுக்கொள்வதோடு, இந்த இணைப்பினை மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் வரை ஓர் மேற்ப்பார்வை செய்து இவ்வாறான பிழைகளை சீர்செய்து கொள்ளவேண்டும் என்றும், இவ்வாறான பொதுச் சொத்துக்கள் தொடர்பான விடயங்களில் அதிகாரிகள் மாத்திரமல்லாது பொதுமக்களாகிய நாம் ஒவ்வொருவரும் இதனை கண்காணித்து பிழைகள் வரும்போது ஆரம்பத்திலேயே சீர்செய்து பாரிய சேதங்களை தவிர்த்துக்கொள்ளவேண்டும், நாம் நமது சொந்த சொத்துக்களில் அக்கறைகாட்டுவது போல, பொதுச் சொத்துக்களும் நமது வரிப்பணத்திலேயே அரசால் இங்கு நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பதை உணர்ந்தவர்களாக செயற்ப்பட்டு வளமான ஓர் நாட்டையும் எதிர்காலத்தையும் கட்டிஎளுப்பவேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்