தவறுக்காக வருந்துகிறேன்: அப்ரிடியிடம் கண்ணீர் மல்க மன்னிப்பு கோரிய சல்மான் பட்

325
சூதாட்ட சர்ச்சையில் சிக்கி சிறைத்தண்டனை அனுபவித்த பாகிஸ்தான் வீரர் சல்மான் பட், ஷாகித் அப்ரிடியிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.

கடந்த 2010ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் டெஸ்ட் அணித்தலைவர் சல்மான் பட் சர்ச்சையில் சிக்கினார்.

இவருடன் முகமது ஆமிர், முகமது ஆசிப் ஆகியோரும் சிக்கினர்.

இந்நிலையில் சூதாட்ட தரகர்களிடம் இருந்து பணத்தை பெற்றுக் கொண்டு மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டது தெரியவந்ததால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், கிரிக்கெட்டில் பங்கேற்க தடையும் விதிக்கப்பட்டது.

இவர்களின் தடைகாலம் கடந்த 1ம் திகதியுடன் முடிவுக்கு வந்துள்ளதால், கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் லாகூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஷாகித் அப்ரிடியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.

அவர் கூறுகையில், இங்கிலாந்தில் நடந்த சம்பவத்திற்காக (சூதாட்டம்) வருந்துகிறேன். அச்சமயம் உங்களின் அறிவுரையை நான் ஏற்று கொண்டிருக்க வேண்டும். சூதாட்ட தொடர்பு வைத்தமைக்காக என்னை மன்னியுங்கள் என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

என்ன செய்வது என்று தெரியாமல் சிறிது நேரம் மவுனமாக இருந்த அப்ரிடி, கிரிக்கெட்டில் கவனம் செலுத்தும்படி அறிவுறுத்தி அனுப்பியுள்ளார்.

SHARE