தாய்கள் இல்லாத கிராமம்: சீனாவில் குழந்தைகளின் அவலநிலை

312
சீனாவில் 6.1 கோடி குழந்தைகள் அனாதைகளாக தவிப்பதாக சமீபத்தில் வெளியான புள்ளி விபரத்தில் தெரியவந்துள்ளது.மத்திய சீனாவின் ஹுனான் மாநிலத்தில் உள்ள ஹூயஜிங் கிராமம் தாய்கள் அற்ற கிராமம்(“motherless village” ) என்று அழைக்கப்படுகிறது.ஏனெனில், இந்த கிராமத்தில் பெற்றோர் இல்லாமல் 132 குழந்தைகள் வசிக்கின்றனர், மேலும் அனாதையாக தவிக்கும் இக்குழந்தைகள் மனநிலை பிரச்சனை மற்றும் பெண் குழந்தைகள் பாலியல் பிரச்சனைகளால் பாதிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.மேலும், சீனாவில் சமீபத்தில் வெளியான புள்ளிவிபரத்தில், 6.1 கோடி குழந்தைகள் அனாதைகளாக உள்ளனர், பெரும்பாலான பெற்றோர்கள் வேலை தேடி நகரங்களுக்கு செல்லும் காரணத்தினாலேயே அனாதைக்குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்று தெரியவந்துள்ளது.

இதுதவிர, மறுமணம் செய்துகொள்வதும், பெற்றோர் மரணமடைவதும் காரணமாக கூறப்படுகிறது.

SHARE